முழு ஊரடங்கு: வங்கிகள் வேலை நேரம் குறைப்பு

Tamilnadu Lockdown: வங்கிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

icici netbanking icici bank netbanking icici net banking icici

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து வங்கிகள் இயக்க மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

வங்கிகளில் பணம் டெபாசிட், பணம் எடுத்தல், பணம் அனுப்புதல் NEFT, RTGS, செக் கிளியரிங், அரசு வணிகங்கள் போன்ற பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தா கூறுகையில், வங்கிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை தொடர்ந்து இயங்கும். ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, குறிப்பிட்ட நேர இடைவெளியில் கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள் முடிந்த வரை ஆன்லைன் சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid corona full lockdown bank working time

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express