Advertisment

மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரிய மனு தள்ளுபடி : காரணம் என்ன?

மெரினாவில் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pen Memorial

கலைஞரின் பேனா நினைவுச்சின்னம்

மெரினாவில் பேனா சிலை அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நினைவாக தமிழக அரசின் சார்பில், 134 அடி உயரத்தில் சென்னை மெரினாவில் பேனா சிலை அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மெரினாவில் பேனா சிலை வைத்தால் அதை இடிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே மெரினாவில் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால் மெரினா கடற்கரையில் பேனா சிலை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் மற்ற கடல் பகுதிகளிலும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மெரினாவில் பேனா சிலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதன் பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment