குண்டும் குழியுமான சாலை, சீரமைத்ததாக தி.மு.க எம்.பி வெளியிட்ட பதிவு; நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!

நீங்கள் இதைச் சரிபார்த்து அப்டேட் செய்தது மகிழ்ச்சி. அதற்காக நன்றி. ஆனால், இது சரியாகச் சீரமைக்கப்படவில்லை, மேலும் இது முன்பைவிட மோசமாகிவிட்டது என்று எக்ஸ் பயனர் கூறியுள்ளார்.

நீங்கள் இதைச் சரிபார்த்து அப்டேட் செய்தது மகிழ்ச்சி. அதற்காக நன்றி. ஆனால், இது சரியாகச் சீரமைக்கப்படவில்லை, மேலும் இது முன்பைவிட மோசமாகிவிட்டது என்று எக்ஸ் பயனர் கூறியுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Chennai Medavakkam

சென்னையில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை மோசமான நிலையில் இருப்பதாக ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவை டேக் செய்த தி.மு.க. எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், அவரின் புகாரை தொடர்ந்து அந்த சாலை சீரமைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு கடுமையாக விமர்சனங்களை பெற்று வரும நிலையில், அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. 

Advertisment

சாலை மோசமாக இருக்கிறது என்று புகார் அளித்த அந்த நபர் தற்போது அந்த சாலையில் நடந்த சீரமைப்புப் பணியின் மோசமான தரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், நெட்டின்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியதால், அந்தப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தென்சென்னை பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர், தமது பகுதியின் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரி, ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தக் வீடியோவில், வாகனங்கள் குழிகளில் சிக்கித் தத்தளிப்பதும், நடந்து செல்பவர்கள் மேடு பள்ளமான பாதையில் எச்சரிக்கையாக நடப்பது என அந்த பகுதியில் அவலநிலை குறித்து கூறியிருந்தார்.

இவரது பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக, சென்னை தெற்குத் தொகுதியின் எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியன், அந்த சாலை சீரமைப்பின் ஒரு படத்தைப் பகிர்ந்தார். அதில், "வணக்கம், உங்கள் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களது கவனத்திற்கு – அதற்கான படத்தை இங்கே இணைத்துள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

இந்த பதிவுக்கு உடனடியாக பதில் அளித்த சந்தோஷ் குமார், சாலை நிலைமை பெரிய அளவில் மாறவில்லை என்பதைக் காட்டும் ஒரு அடுத்தடுத்த பதிவை வெளியிட்டார். அவர், "வணக்கம் மேம், நீங்கள் இதைச் சரிபார்த்து அப்டேட் செய்தது மகிழ்ச்சி. அதற்காக நன்றி. ஆனால், இது சரியாகச் சீரமைக்கப்படவில்லை, மேலும் இது முன்பைவிட மோசமாகிவிட்டது என்று சொல்வதற்கு மன்னிக்கவும். நான் இப்பதான் டீ குடிக்க வெளியே சென்று இதை நேரில் பார்த்தேன். தயவுசெய்து சரியான சீரமைப்புக்கு தேவையானதைச் செய்யுங்கள். மேலும், இணைப்புச் சாலைகளும் மோசமாக உள்ளன, அதையும் சரிபார்க்கவும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதில், உள்ளூர் அதிகாரிகள் மோசமான பராமரிப்பு மற்றும் தற்காலிகச் சீரமைப்புகளை மட்டுமே செய்வதாகக் குற்றம் சாட்டிய பயனர்களிடையே கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது. இது குறித்து எக்ஸ் பயனர் ஒருவர், "இதைச் சீரமைப்பு என்று சொல்லும் தைரியம்! என்று தமிழச்சி தங்கபாண்டியனை விமர்சித்துள்ளார், மற்றொருவர், "செங்கற்களைப் போட்டுவிட்டு, இதைச் சரிசெய்துவிட்டதாகச் சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொரு பயனர் கிண்டலாக, "இந்தச் சாலையில் மக்கள் வெறுங்காலுடன் நடந்தால், அவர்களின் அனைத்து நரம்பு முடிச்சுகளும் தூண்டப்பட்டு, சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். அக்குபிரஷர் பாதைகளைக் கொடுத்தமைக்கு நன்றி அம்மா," என்று பதிவிட்டுள்ளார். நகரத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் மோசமான சாலைப் பணிகளைப் பற்றிய கவலைகளையும் எக்ஸ் பயனர்கள் அதிகமாக எழுப்பியுள்ளனர். 

இந்தச் சீரமைப்பு நிச்சயமாக நிரந்தரத் தீர்வு அல்ல. இதே அணுகுமுறைதான் கடந்த நாற்பது முதல் ஐம்பது ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது, பெருநகர சென்னை மாநகராட்சி நீண்ட காலத் தீர்வுகளை நோக்கி கவனத்தைச் செலுத்த வேண்டிய நேரம் இது," என்று ஒரு பயனர் கருத்துத் தெரிவித்தார். 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: