ஆட்சிக்கு எந்த மிரட்டலும் இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

2021-வரை அதிமுக ஆட்சி தொடரும்

தங்க தமிழ்ச் செல்வன் கூறியதை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
இதுவரை டிடிவி தினகரனுக்கு 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரை சந்தித்துள்ளனர். இந்நிலையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியார்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: டிடிவி தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்தித்ததால் பெரும்பான்மைக்கு பாதிப்பில்லை. டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ-க்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பார்கள். அந்த சந்திப்பானது அரசியல் ரீதியாக இருந்திருக்காது. 2021-வரை அதிமுக ஆட்சி தொடரும். கட்சியில் வழிகாட்டும் குழு உள்ளது. அந்த வழிகாட்டுதல் குழு கூறுவதன்படியே கட்சி வழி நடத்தப்படுகிறது என்று கூறினார்.
 

×Close
×Close