Advertisment

செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு உதடு மறைவற்ற முகக்கவசம் - தமிழகம் புது முயற்சி

உதடு மறைவற்ற முகக்கவசங்களை சோதனை செய்யும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு உதடு மறைவற்ற முகக்கவசம் - தமிழகம் புது முயற்சி

செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்கள் தங்கள் கருத்துக்களை உலகிற்கு எடுத்துக் கூறும் வகையில், உதடு மறைவற்ற முகக்கவசத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து, தனது ட்விட்டரில், "வெவ்வேறு திறன்களைக் கொண்ட அனைவரையும்  சென்றடைவது எங்கள் முயற்சியாகும். குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுக்கு உதட்டு அசைவுகளை புரிந்து கொள்ள உதவும் உதடு மறைவற்ற முகக்கவசங்களை சோதனை செய்யும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த முயற்சியின் கீழ், 13,500 செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன்  பாதிக்கப்பட்ட  மாற்றுத் திறனாளிகள், காதுகேளாதா சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் , மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள், மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள், உடன் பணிபுரிபவர்கள் என  81000 எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் சோதனை முயற்சியில் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிக்காக தமிழக அரசு 12.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

ஜானி டாம் வர்கீஸ், இது குறித்து கூறுகையில்," தற்போது நடைமுறையில் இருக்கும் முகக்கவசம்,  செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட  மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமானதாக இல்லாதாதால், இந்த முயற்சி கட்டாயமாகிறது. இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த வகை முகக்கவசங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. திருப்பூரில் உள்ள உற்பத்தியாளரிடம்  முகக்கவசம் குறித்த எங்கள் எதிர்பார்ப்பை கூறியுள்ளோம். மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகங்கள் இந்த முயற்சியில் முக்கி பங்கு வகிக்கும்" என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment