Advertisment

தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டம் செல்லும்: நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
online rummy ban, TN govt formed online gaming authority, foremer IAS nasimuddin, Online Rummy Ban, ஆன்லைன் சூதாட்டம், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய ஆணையம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஆணையம், online rummy ban authority, TN govt formed online gaming authority, ex IAS nasimuddin

தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Advertisment

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை, மசோதா 2வது முறையாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிதி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அதிர்ஷடம் அடிப்படையிலான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது.  

மேலும் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கார் ஆகிய விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment