ஆவின் பால் விலையை அரசு உயர்த்தியதா? உண்மை என்ன?

Avin Milk Rate Update : தமிழகத்தில் ஆவின்பால் விலை குறைக்கப்பட்டுள்ளது குறித்தது எப்படி என்பது குறித்து புது தகவல் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக திலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நேற்று முதல்வருக்கான பணிகளை தொடங்கிய ஸ்டாலின், தேர்தல் அறிவிப்பு திட்டம் தொடர்பான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்த 5 கோப்புகளில் முக்கியமானது ஆவின்பால் விலைக்குறைப்பு. இதில் ஆவின்பால் விலை ரூ3 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்படடது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அது என்னவென்றால், அரசானையில் இருக்கும் ஆவின்பால் விலை குறைப்பில் ரூ6 உயர்த்தப்பபட்டு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பொதுமக்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள திமுகவினர், பொதுமக்களிடம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். தற்போது அரசு அறிவித்துள்ள பால்கொள்முதல் விலையில், பசும்பால் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28இல் இருந்து ரூ.32 ஆகவும், எருமைப்பால், ஒரு லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35இல் இருந்து ரூ.41 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

விற்பனை விலையில், பொதுமக்களின் நலன் கருதி அரசு நன்கு பரிசீலனை செய்து அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை லிட்டருக்கு ரூ.6இல் இருந்து ரூ.3 ஆகக் குறைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழக அரசின் இந்த விலை குறைப்பு ஆணை வருகிற 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆவின்பால் விலையை 6 ரூபாய் உயர்த்தி அதில் இருந்து 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால கடந்த 2019ஆம் ஆண்டு ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனை சுட்டிக்காட்டிய தற்போதைய அரசு, அதிலிருந்து 3 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இது எதிர்கட்சிகள் செய்யும் சதி என்று கூறும் திமுகவினர், அதிமுக ஆட்சியில் பால்விலை ரூ 6 உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government aavin milk rate update in tamilnadu milk

Next Story
எதிர்கட்சி தலைவர் போட்டி : இபிஎஸ் – ஒபிஎஸ் வைரல் மீம்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com