தீபாவளி சிறப்பு பஸ்கள் முழு விவரம் : வெளியூர் பஸ்கள் புறப்படும் இடங்கள் அறிவிப்பு

தீபாவளி சிறப்பு பஸ்கள் பற்றிய முழு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. வெளியூர் பஸ்கள் புறப்படும் இடங்கள் விவரம் தரப்படுகிறது.

தீபாவளி சிறப்பு பஸ்கள் பற்றிய முழு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. வெளியூர் பஸ்கள் புறப்படும் இடங்கள் விவரம் தரப்படுகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
diwali festival, tamilnadu,tamilnadu state government transport corporation, tamilnadu government, minister m.r.vijayabaskar, diwali special bus

தீபாவளி சிறப்பு பஸ்கள் பற்றிய முழு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. வெளியூர் பஸ்கள் புறப்படும் இடங்கள் விவரம் தரப்படுகிறது.

Advertisment

பண்டிகை காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு எவ்வளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன? என்பது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 15-ந் தேதி தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 275 பஸ்களுடன் 788 சிறப்பு பஸ்களும், 16-ந் தேதி தினசரி இயக்கப்படும் 2,275 பஸ்களுடன் 1,844 சிறப்பு பஸ்களும், 17-ந் தேதி தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 275 பஸ்களுடன் 2 ஆயிரத்து 188 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 645 பஸ்கள் இயக்கப்படும்.

மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து 15-ந் தேதி 1,291 சிறப்பு பஸ்களும், 16-ந் தேதி 3 ஆயிரத்து 865 சிறப்பு பஸ்களும், 17-ந் தேதி 5 ஆயிரத்து 955 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 111 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Advertisment
Advertisements

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 19-ந் தேதி 1,338 சிறப்பு பஸ்களும், 20-ந் தேதி 466 சிறப்பு பஸ்களும், 21-ந் தேதி 492 சிறப்பு பஸ்களும், 22-ந் தேதி 1,498 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 794 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அதேபோல், பிற ஊர்களில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்ல 19-ந் தேதி 1,933 சிறப்பு பஸ்களும், 20-ந் தேதி 1,300 சிறப்பு பஸ்களும், 21-ந் தேதி 1,400 சிறப்பு பஸ்களும், 22-ந் தேதி 2 ஆயிரத்து 410 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 43 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 33 ஆயிரத்து 593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டுகளை போல, 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் செல்லும் பயணிகள் சிறப்பு பஸ்களில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களும், தாம்பரம் சானடோரியத்தில் (மெப்ஸ்) 2 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களும் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்படும். இந்த கவுண்ட்டர்கள் வருகிற 13-ந் தேதி முதல் செயல்படும்.

பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் சென்னையில் 5 இடங்களில் இருந்து புறப்படுகின்றன. மேலும், சில போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வருமாறு:

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் அண்ணாநகரில் (மேற்கு) உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பஸ்கள் சைதாப்பேட்டை நீதிமன்ற பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்பட) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேற்கண்ட 4 தடப்பகுதியில் செல்லும் பஸ்களுக்கு 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் சென்று பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்து இருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம்(கிளாம்பாக்கம்) தற்காலிக பஸ் நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு பஸ்கள் பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பஸ் நிலையங்களுக்கும் இணைப்பு பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: