/indian-express-tamil/media/media_files/2025/06/28/electric-bus-in-tamilnadu-2025-06-28-07-41-02.jpg)
கேரளா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தனது 100 பேருந்துகளை, இலவசமாக சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு பேருந்தாக மாற்றுவதற்கான, இந்தியன் ஆயில்–அதானி குழுமத்தின் சலுகையை நிராகரித்துள்ளது. சுமார் ரூ7 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தொடர்பாக, me;நிறுவனம் பல கடிதங்களை அனுப்பியும் கழகத்திடம் இருந்து பதில் வராததால் கைவிடப்பட்டது.
இது குறித்து மாத்ருபூமி வெளியிட்டுள்ள செய்தியில், பழமையான பேருந்துகள் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு இணங்க, தூய்மையான எரிபொருளுக்கு மாற வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) வழிகாட்டுதல்களைக் கேரளா பூர்த்தி செய்ய இந்தத் திட்டம் உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், கேரளாவின் போக்குவரத்து அதிகாரிகள் இந்தத் திட்டத்துடன் முன்னேறவில்லை. இந்த திட்டத்தில் இருந்து கேரளா பின்வாங்கிய நிலையில், தமிழ்நாடு இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், 1,000 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு பேருந்தாக மாற்றுவதற்கு ரூ78 கோடி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. ஒரு வாகனத்திற்கு தோராயமாக ரூ7.8 லட்சம் செலவாகிறது. மும்பையைத் தளமாகக் கொண்ட எக்கோ ஃபியூயல் சிஸ்டம்ஸ் இந்த 1,000 பேருந்துகளில் 850- பேருந்துகளை மாற்றும் பணியை ஏற்றுள்ளது, மீதமுள்ள 150 பேருந்துகளை இரண்டு நிறுவனங்கள் கையாளும். முழுத் திட்டமும் ஒரு வருடத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மேலும் 760 பேருந்துகளை மாற்றுவதற்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை வெளியிடத் தயாராகி வருகிறது.
கேரளா அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளின் கூற்றுப்படி, சிஎன்ஜி-க்கு மாறுவது நிதி ரீதியாக லாபகரமானது அல்ல என்று கருதப்பட்டதால், இந்தியன் ஆயில்–அதானி குழுமத்தின் இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது. டீசலுக்கும் சிஎன்ஜி-க்கும் இடையேயான விலை வித்தியாசம் லிட்டருக்கு சுமார் ரூ4.50 மட்டுமே என்றும், இது இயக்கச் செலவில் மிகக் குறைந்த சேமிப்பையே அளிக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.
மேலும், சிஎன்ஜி கருவிகளைப் பொருத்திய பேருந்துகளில் அடிக்கடி என்ஜின் பழுதுகள் ஏற்படுவதாகவும், செயல்திறன் குறைவாக இருப்பதாகவும், இது அதிக பராமரிப்புச் செலவுகளுக்கு வழிவகுக்கும். இந்தக் கவலைகள், சிஎன்ஜி-ஐ ஏற்றுக்கொள்வதன் சாத்தியமான நன்மைகளை விட அதிகமாக பாதகங்கள் இருக்கிறது. குறிப்பாக, சுற்றுச்சூழல் நன்மைகள் முடிவெடுக்கும் போது கருத்தில் கொள்ளப்படவில்லை, குறுகிய காலச் செலவினங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது என்றும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை, சிஎன்ஜி-க்கு மாறுவதன் மூலம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ2.9 முதல் ரூ4 வரை சேமிப்பு கிடைப்பதாகவும், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவதாகவும், அதே நேரத்தில் உமிழ்வைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளது. மேலும், 1,000 பேருந்துகளை சிஎன்ஜி-யாக மாற்றுவது ஆண்டுதோறும் 5.7 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை குறைக்கும் என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
இந்த பெரிய அளவிலான திட்டம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் மற்றும் இந்தியாவின் தேசிய தூய காற்றுத் திட்டம் (NCAP) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. அதே சமயம், கேரளா அரசின் முடிவை சுற்றுச்சூழல் வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். ஏனெனில், கேரளா அரசு போக்குவரத்து கழக்ம், அதன் பழமையான பேருந்துகளை எந்தச் செலவும் இல்லாமல் நவீனமயமாக்குவதற்கான ஒரு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த நடவடிக்கை, நிலைத்தன்மை மற்றும் மாசுபாட்டுக் கட்டுப்பாடு குறித்து மாநிலத்தின் பொது நிலைப்பாட்டிற்கு முரணாக இருப்பதாகவும், இந்த நிராகரிப்பு, கேரளாவின் போக்குவரத்துத் திட்டமிடல் நீண்ட கால சுற்றுச்சூழல் மற்றும் செயல்பாட்டு ஆதாயங்களை விட உடனடி நிதி நிலைத்தன்மையில் மட்டுமே குறுகிய கவனம் செலுத்துகிறதா என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us