தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும்…!

'கூவத்தூர் பாய்ஸை' பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொண்டர்கள் பற்றி தான் கவலைப்படுகின்றோம்

By: May 13, 2017, 12:31:17 PM

ஓ.பி.எஸ். ஆதரவாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான மைத்ரேயன் இன்று அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. இரண்டுமே தேடக்கூடிய நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலை நிலவுகிறது. தொழிற்சாலைகள் வெளிமாநிலத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மர்மமான மரணங்கள் தொடர்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பதில்லை.

அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. வழக்குகளையும் சந்திக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைச்சர் காமராஜ் மீது வழக்கு, அமைச்சர் சரோஜா பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இப்போது அமைச்சர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அனைவரும் ராணுவ கட்டுப்பாட்டோடு செயல்பட்டனர்.

எனவே, இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. சட்டசபை தேர்தல் விரைவில் வரும். இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும். ‘கூவத்தூர் பாய்ஸை’ பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொண்டர்கள் பற்றி தான் கவலைப்படுகின்றோம். விரைவில், தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும்” என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu government will collapse soon mp maithreyan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X