30-ஆம் தேதி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வீட்டு சாப்பாடு தான்!

குறிப்பாக, ஏ.சியுடன் உள்ள ஹோட்டல்களில் விலைகள் தாறுமாறாக உயருமாம்.

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி வரி விதிப்புமுறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பின்மூலம் விலைவாசி முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஹோட்டல்களில் உணவுகளின் விலை அதிகமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஏ.சியுடன் உள்ள ஹோட்டல்களில் விலைகள் தாறுமாறாக உயருமாம்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு, “ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் உணவுகளின் விலை கடுமையாக உயரும். இதனை மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும். இதனால், ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மே-30ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு, ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து, தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

×Close
×Close