கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி தலைவருக்கு எதிராக போராட்டம்; அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

தங்கள் பகுதிக்காக அனுமதிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை வேறு இடத்தில் கட்ட அனுமதி கொடுத்த ஊராட்சி தலைவருக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் பகுதிக்காக அனுமதிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை வேறு இடத்தில் கட்ட அனுமதி கொடுத்த ஊராட்சி தலைவருக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madhavachery

கள்ளக்குறிச்சி அருகே, கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை தனியார் இடத்தில் கட்ட அனுமதி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், காமராஜர் நகர் என்ற பகுதிக்கு அரசின் சார்பில் தண்ணீர் தொட்டி கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை மக்களுக்கு தெரிவிக்காத ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகிய இருவரும், தனியாருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகில் உள்ள அரசின் புறம்போக்கு நிலத்தில் தண்ணீர் தொட்டியை கட்ட அனுமதி அளித்துள்ளனர்.

Advertisment
Advertisements

Madhavachery

மேலும் தற்போது தண்ணீர் தொட்டி கட்டும் இடம், காமராஜர் நகரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளதால் இந்த தண்ணீர் தொட்டியில் இருந்து காமராஜர் நகருக்கு தண்ணீர் செல்வது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. இது குறித்து அறிந்த காமராஜர் நகர் மக்கள், ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது அவர் சட்டமன்ற உறுப்பினரின் நிதியில் இந்த தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். இதன் பிறகு பொதுமக்களின் சிலர் ஆன்லைனில் செக் செய்தபோது, இந்த தண்ணீர் தொட்டி பிரதமரின் திட்டத்தில் காமராஜர் நகருக்கு கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாக காட்டியுள்ளது.

Madhavachery

இந்த தகவலை தெரிந்துகொண்ட காமராஜர் நகர் மக்கள், இது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தண்ணீர் தொட்டி கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக பல அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் காமராஜர் நகர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

Madhavachery

இதன் காரணமாக பொதுமக்கள் தண்ணீர் குடத்துடன் இன்று காலை மாதவச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீபாவளி முடிந்து காமராஜர் நகரில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் என்று உறுதி அளித்த அவர், தற்போது 3 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டி பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Madhavachery

ஆனாலும், தீபாவளி முடிந்து காமராஜர் நகரில் தண்ணீர் தொட்டி கட்டும் பணி தொடங்கவில்லை என்றால், அடுத்து கச்சிராயபாளையத்தில் உள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காமராஜர் நகர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு வரும் இடத்தில் வீட்டு மனைகள் இருப்பதால், இந்த தண்ணீர் தொட்டி கட்டப்பட்டவுடன் அதனை வைத்து வீட்டு மனைகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: