புதன் கிழமையுடன் நிறைவடையும் வேட்புமனு தாக்கல் : உள்ளாட்சி தேர்தலில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேர் மனு

Tamilnadu Election News : தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் தீவிரமடைந்து்ளளது.

Tamil Nadu Local Body Election :தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்காக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். அந்தந்த மாவட்டங்கில் வேட்புமனு தாக்கல் தீவிரமான நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருநெல்வேலி,தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு  உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் மாத இறுதிக்குள்  உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டிய தமிழக தேர்தல் ஆணையம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும், செப்டம்பர் 15-ந் தேதி முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து முதல் 5 நாட்கள் குறைவான மனுக்களே தாக்கல் செய்யப்பட்ட நிலையில். 6-வது நாளான இன்று ஒரே நாளில் 34091 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 மாவட்டங்களை சேர்த்து இதுவரை  55045 வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமகு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், நாளை மனுதாக்கல்  மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu local body election candidate nomination filed

Next Story
ஊரக உள்ளாட்சி தேர்தல்: இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு கிள்ளிக் கொடுத்த திமுகlocal body elecitons, tamil nadu 9 district local body elections, vellore district local body election, உள்ளாட்சி தேர்தல், தமிழ்நாடு, 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல், திமுக, கிள்ளிக் கொடுத்த திமுக, காங்கிரஸ், முக ஸ்டாலின், துரைமுருகன், காங்கிரஸ் வருத்தம், கேஎஸ் அழகிரி, dmk gives very few seats to alliance parties, congress, dmk, mk stalin, durai murugan, congress ks alagiri, vck, cpi, cpm
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com