உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: திமுக எங்கே வென்றது? எங்கே சறுக்கியது?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட வாரியாக எங்கெல்லாம் அதிக இடங்களை வெற்றி பெற்று பலத்துடன் உள்ளது; எங்கெல்லாம் அது சறுக்கியுள்ளது என்பதை காணலாம். திமுகவின் அடிப்படை அலகுகள் உள்ளூரில் எந்த அளவுக்கு பலத்துடன் உள்ளன என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.

election results tamil nadu, tamilnadu election result, tn election results 2019, Local body election results, dmk won, dmk looses, where looses reporttamil nadu election results, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், திமுக வெற்றி பெற்ற இடங்கள், திமுக தோல்வியடைந்த இடங்கள், local body election result, tamil nadu local body election result, local body election, tn local body election result, tamil nadu election commission, tnsec, tamil nadu election result, tn election results 2020, ullatchi election result, election result, tamil nadu panchayat election result
election results tamil nadu, tamilnadu election result, tn election results 2019, Local body election results, dmk won, dmk looses, where looses reporttamil nadu election results, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், திமுக வெற்றி பெற்ற இடங்கள், திமுக தோல்வியடைந்த இடங்கள், local body election result, tamil nadu local body election result, local body election, tn local body election result, tamil nadu election commission, tnsec, tamil nadu election result, tn election results 2020, ullatchi election result, election result, tamil nadu panchayat election result

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்ற தேர்தலிலோ அல்லது மக்களவைத் தேர்தலிலோ பெரும்பாலும் பிரதிபலிப்பது இல்லை என்றாலும், அரசியல் கட்சிகளின் அடிப்படை அலகுகள் எந்தளவுக்கு பலமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடியது.

கடந்த தசாப்தம் வரை தமிழக அரசியலில் இரு துருவங்களாகவும் இரு பெரும் தலைவர்களாகவும் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகு, வந்த மக்களவைத் தேர்தலிலும், இடைத் தேர்தலிலும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினும் அதிமுகவின் இரு தலைமையும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சென்றனர். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், அதிமுக தலைமை இடைத் தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்திக்கொண்டனர். ஆனால், இந்த இரு தேர்தல்களுமே மக்கள் மத்தியில் இரு கட்சிகளின் தலைமைகளில் யாருக்கு செல்வாக்கும் ஈர்ப்பும் உள்ளது என்று முழுமையாக வெளிப்படுத்தவில்லை.

அதே நேரத்தில், மத்தியில் தனது இரண்டாவது ஆட்சியை தொடங்கியுள்ள பாஜக தமிழக அரசியலில் ஏற்படுத்திவரும் சலசலப்புகள், புதிய கட்சிகளின் வருகை ஆகியவை பிரதான கட்சிகளின் பலம் குன்றியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக அரசியல் நிகழ்வுகல் இருந்தது. அந்த வகையில், மாநிலத்தின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளின் அடிப்படை அலகுகள் உள்ளூரில் எந்த அளவுக்கு பலத்துடன் உள்ளன என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த உள்ளட்சி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி கட்சிகள்தான் உள்ளாட்சி தேர்தலிலும் களம் கண்டுள்ளன.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தன.

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர 27 மாவட்டங்களில் டிசம்பர் 27,30 தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 315 மையங்களில் எண்ணப்பட்டது.

தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இதில் கூட்டணி கட்சிகள் வெற்றியை சேர்க்காமல் மாவட்ட வாரியாக திமுக எங்கெல்லாம் அதிக இடங்களை வெற்றி பெற்று பலத்துடன் உள்ளது; எங்கெல்லாம் அது சறுக்கியுள்ளது என்பதை காணலாம்.

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 12 இடங்களில் திமுக 1 இடத்தையும் அதிமுக 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இதுவே ஊராட்சி ஒன்றிய கவுன்சிலில் திமுக 41, அதிமுக 35 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில், மொத்தமுள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 12 இடங்களையும் திமுக 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 183 இடங்களில் அதிமுக 93 இடங்களையும் திமுக 59 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 287 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 82 இடங்களிலும் அதிமுக 109 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 3 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 115 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 33 இடங்களையும் அதிமுக 66 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரியில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக ஒரு இடங்களில்கூட வெற்றிபெறாத நிலையில், அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 21 இடங்களிலும் அதிமுக 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 12 இடங்களையும் அதிமுக 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் அதிமுக 59 இடங்களையும் திமுக 88 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

கோவை மாவட்டம்

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 5 இடங்களையும் அதிமுக 10 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 48 இடங்களையும் அதிமுக 67 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 16 இடங்களில் திமுக 6 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் 161 இடங்களில் திமுக 63 இடங்களிலும் அதிமுக 60 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 29 இடங்களில் திமுக 5 இடங்களிலும் அதிமுக 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 288 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 74 இடங்களையும் அதிமுக 128 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 28 இடங்களில் திமுக 21 இடங்களையும் அதிமுக 6 இடங்களையும் வெற்றிகொண்டுள்ளன. ஒன்றிய கவுன்சிலில் திமுக 156 இடங்களையும் அதிமுக 76 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

தருமபுரி மாவட்டம்

தருமபுரியில் உள்ள 18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 7, அதிமுக 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 50 இடங்களையும் அதிமுக 64 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கவுன்சிலில் 23 இடங்களில் திமுக 15 இடங்களையும் அதிமுக 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 232 இடங்களில் திமுக 117 இடங்களிலும் அதிமுக 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்ட கவுன்சிலில் 24 இடங்களில் திமுக 18 இடங்களையும் அதிமுக 5 இடங்களையும் வெற்றிகொண்டுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 146 இடங்களையும் அதிமுக 56 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 3 இடங்களையும் அதிமுக 13 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 170 இடங்களில் திமுக 77, அதிமுக 57 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 34 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 23 இடங்களையும் அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 341 இடங்களில் திமுக 142 இடங்களிலும் அதிமுக 93 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 24 இடங்களில் திமுக 17 இடங்களையும் அதிமுக 5 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 230 இடங்களில் திமுக 103 இடங்களிலும் அதிமுக 68 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 18 இடங்களில் திமுக 10 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 176 இடங்களில் திமுக 72, அதிமுக 58 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 17 இடங்களில் திமுக 5 இடங்களையும் அதிமுக 12 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 174 இடங்களில் திமுக 61 இடங்களிலும் அதிமுக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட கவுன்சிலில் 10 இடங்களில் திமுக 2 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் மொத்தமுள்ள 98 இடங்களில் திமுக 40, அதிமுக 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட கவுன்சிலில் 21 இடங்களில் திமுக 14 இடங்களையும் அதிமுக 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 214 இடங்களில் திமுக 107, அதிமுக 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்ட கவுன்சிலில் மொத்த முள்ள 17 இடங்களில் திமுக 4 இடங்களையும் அதிமுக 12 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளது. 172 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக திமுக 62 இடங்களையும் அதிமுக 89 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 4 இடங்களையும் அதிமுக 1 இடத்தையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 59 இடங்களில் திமுக 31, அதிமுக 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலில் 22 இடங்களில் திமுக 11, அதிமுக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 225 இடங்களில திமுக 116 இடங்களிலும் அதிமுக 68 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்ட கவுன்சிலில் 8 இடங்களில் திமுக 7 இடங்களையும் அதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 76 இடங்களில் திமுக 38, அதிமுக 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 23 இடங்களில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி கொண்டுள்ளன. 214 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 92, அதிமுக 88 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 11, அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 170 இடங்களில் திமுக 78 இடங்களையும் அதிமுக 49 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தி மொத்தமுள்ள 20 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 7 இடங்களையும் அதிமுக 13 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மொத்தமுள்ள 200 இடங்களில் திமுக 95 இடங்களையும் அதிமுக 81 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்த தகவல்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணி கட்சிகள் பெற்ற வெற்றி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இது பிரதான கட்சிகளின் தனிப்பட்ட முறையில் அதன் பலம் என்ன என்பதை அலசுவதற்கான தரவுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் வெற்றி விவரங்களை ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டு பார்க்கையில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் இது பெரும்பாண்மை வெற்றி என்று சொல்ல இயலாத அளவில் உள்ளது. பல மாவட்டங்களில் திமுகவைவிட அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் அரசியல் பலத்தின் தராசு தட்டுகள் இரு கட்சிகளுக்கும் ஏற்ற இரக்கங்களுடனே அமைந்துள்ளது. இதனை யாருக்கும் மிகப்பெரிய வெற்றி என்று சொல்ல முடியாத அளவுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி ஏற்றம் இறக்கம் இருந்தாலும் இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பதாகவே காட்டுகின்றன.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu local body election results dmk where won where looses report

Next Story
சட்டமன்ற தேர்தலில் அணி வகுக்குமா தமிழக பாஜக?tn election, tamil nadu election
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express