scorecardresearch

வனத்துறையினர் வாகனத்தை தாக்கிய மக்னா யானை : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய அதிகாரிகள்

மக்னா யானை சரளப்பதி அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் புகுந்த மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முயன்றனர்.

Forest Jeep
Coimbatore

பொள்ளாச்சி அடுத்த சரளப்பதி அருகே வனத்துறை வாகனம் மீது மக்னா தாக்குதல் நடத்திய நிலையில், அதிர்ஷ்டவசமாக வேட்டை தடுப்பு காவலர்கள் உயிர் தப்பினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் பொது மக்களை அச்சுறுத்தியும் மக்னா யானை ஒன்று சுற்றி திரிந்தது. அதனை வனத்துறையினர் பிடித்து ஆனைமலை புலிகள் காப்பக டாப்சிலிப்பில் உள்ள யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை மதுக்கரைக்கு சென்றது. பின்பு மீண்டும் அந்த யானையை பிடித்து ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியான மானாம்பள்ளி மந்திரி மட்டம் பகுதியில் வனத்துறையினர் விட்டனர். இதனிடையே மீண்டும் வெளியில் வந்து தம்மம்பதி பகுதிகளில் உலா வந்த மக்னா தனியார் தோப்புகளுக்குள் உலா வந்துள்ளது.

இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து யானையை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்கி யானைகளான முத்து, சின்னத்தம்பி மற்றும் ராஜவர்த்தன் ஆகிய யானைகள் சரளபதி பகுதியில் மக்னாவை கட்டுப்படுத்த ஒரு வாரமாக நிறுத்தி வைத்தனர்

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மக்னா யானை சரளப்பதி அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் புகுந்ததை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினரின் வாகனத்தை மறைந்திருந்து வந்து மக்னா யானை தாக்கியது.

இந்த தாக்குதலில் ஜீப் தலை குப்புற கவிழ்ந்தது இதில் வாகன ஓட்டுநர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன், வனக்காப்பாளர் ராஜ், வேட்டை தடுப்பு காவலர்களான அகிலேஷ் மற்றும் மணி உள்ளிட்ட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இதில் வனந்துரையினரின் வாகனம் சேதமானது.

இந்த தாக்குதல் காயப்பட்டவர்கள் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் வேட்டை தடுப்பு காவலர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் வனத்துறையினர் மக்னா யணையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu makna elephant attack forest jeep in coimbatore

Best of Express