Advertisment

இளைஞர்கள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் : அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mano thangaraj

தமிழ் நாடு

பாபு ராஜேந்திரன் விழுப்புரம்

Advertisment

படித்த வேலையற்ற இளைஞர்கள் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையில் நிறைய ஆர்வம் காட்ட வேண்டும். இவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என பால்வளத் துறையை அமைச்சர் மனோ தங்கராசு தெரிவித்தார் தெரிவித்தார்

இன்று விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி ஆவின் தலைமை நிறுவன அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். எம்எல்ஏக்கள் நா.புகழொந்தி, டாக்டர் இரா. இலட்சுமணன்,சிவக்குமார்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம. ஜெயச்சந்திரன், ஆவின் சேர்மன் தினகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில் பேசிய பால்வளத் துறை அமைச்சர் தங்கராஜ் கூறுகையில்.

,தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும், கால்நடை வளர்ப்பிற்கு வங்கி மூலம் கடனுதவி பெற்று சிறு,  குறு, பால் உற்பத்தியாளராக உருவாகிட கால்நடைத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும், வங்கிகளின்  கடன் உதவிக்கான உதவிகளையும் செய்ய கால்நடைத்துறை  முன்வந்துள்ளது இவற்றினை இளைஞர்கள், விவசாயிகள் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment