கமல்ஹாசன் வாக்குகளை பெற்றுக் கொண்டு தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை கோவையில் ஐ.ஜே.கே மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு.
கோவை காளப்பட்டி அருகே உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டல மாநாட்டில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டிற்கு ஐ.ஜே.கே கட்சியை சேர்ந்த கோவை உட்பட திருப்பூர் ஈரோடு நீலகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பெண்கள் உட்பட 500"க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மண்டல மாநாட்டை சிறப்பித்தனர்.
முன்னதாக இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: திமுக ஆட்சியாக இருந்தாலும் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தான். கோவையில் 50" ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை நாங்கள் கொடுத்துள்ளோம்.கமல்ஹாசன் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றுக் கொண்டு இன்னும் எட்டி பார்க்கவில்லை. வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கோவைக்கு பல திட்டங்களை பேசி வருகிறார்.
தமிழக அமைச்சர்களையும் இங்கு கோவையில் காணோம். எடப்பாடியார் பிரதமர் அருகில் உட்கார்ந்து இருந்தார்.தமிழ்நாட்டில் இன்றைய ஆளும் கட்சி கோவையை புறக்கணிக்கிறது.
எடப்பாடி தலைமையில் 40"தும் வெல்வோம். பாரிவேந்தர் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். சொந்த செலவு செய்து சிறப்பாக உள்ளார். அவருக்கு உறுதுணையாக ரவி பச்சமுத்து உள்ளார். புறக்கணித்த திட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து பேசிய சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது.
பாரிவேந்தர் பாஜகவுடன் முதல் கூட்டணியை தொடங்கியவர். அவர் முதலில் கூட்டணியில் வந்ததுடன் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று ஒலித்தவர். நாடாளுமன்றத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் பாரிவேந்தர்.திமுக"விற்கு ஒரு சீட்டு கூட வரவிடாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கை பெற்றுக் கொடுத்தது கோவை மக்கள்.சிறுகுறு தொழிலுக்கு உறுதுணையாக பாஜக அரசு உள்ளது. வரக்கூடிய காலத்தில் ஒவ்வொரு வெற்றியும் தேசிய ஜனநாயக கூட்டணி உடையது.இந்தியாவின் மதிப்பு உலக அளவில் மாறிக்கொண்டு வருகிறது. அனைவருக்கும் கழிப்பிடம், கேஸ் இணைப்பு வசதி என தமிழகத்திற்கான பங்கை மத்திய அரசு வழங்கி உள்ளது இவ்வாறு மேடையில் பேசினார்.இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து பேசியதாவது.
நாங்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.லீமா ரோஸ் மார்ட்டின் பெரிய கூட்டத்தைக் கூட்டி கோவையை பேச வைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கூடிய விரைவில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். கன்னியாகுமரியில் துவங்கிய தருமபுரி வரையிலும் சென்னையில் இருந்து வங்கி கோவை வரையிலும் செடிகள் தோன்றியது போல் இக்கட்சி நன்கு கால் ஊன்றி உள்ளது. 2024 ஆம் தேர்தலுக்குள் அடர்ந்த டென் சிட்டியாக இது மாறும் இதில் மாற்று கருத்து கிடையாது. ஆகஸ்ட் 24 ஐயா பிறந்தநாள் அன்று, நானும் பொதுச் செயலாளரும் உங்களுக்கெல்லாம் அழைப்பு விடுகிறோம் அனைவரும் ஒன்றிணைந்து வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு பேசினார்.
மேடைப்பேச்சை தொடர்ந்து ரவி பச்சை முத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :கோவை மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது.என்.டி.ஏ கூட்டத்தில் பாரிவேந்தர் பிரதமர் தலைமையில் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தார்.
சென்னைக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்து கிளை வேலையை தொடங்கு உத்தரவிட்டுள்ளார்.2024"தேர்தலுக்கு தயாராக அறிவுரை செய்துள்ளார்.கோவையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் எஸ்.பி.வேலுமணி வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர். என்.டி.ஏ கூட்டணியின் துவக்கமாக பார்க்கப்படுகிறது.பாரதி ஜனதா கட்சி பெரிய கட்சி - ஆட்சி செய்துள்ளார்கள் .நிறைய நல்லது நடந்துள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணி வலுவாக உள்ளது.
மணிப்பூர் கலவரம் விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு பின் கருத்து தெரிவிக்கலாம்.மக்களை சந்தித்து வருகிறோம். மக்கள் எங்களை வெற்றி பெற செய்தால் கேள்வி கேட்கலாம். பாரிவேந்தர் வாக்குறுதிகளை சிறப்பாக செய்துள்ளார்.
அதேபோல் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் நின்றால் தொகுதியை சீரமைப்பார்கள்.
கூட்டணியில் இருப்பவர்கள். மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். கட்சியாக கேட்டால் நாலு தொகுதி கேட்போம் கூட்டணியில் 40 சீட்டு எப்படி கொடுப்பது என்பது அந்த நேரத்தில் தான் முடிவு வரும்.மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார்கள் ஆனால் செய்யவில்லை. கட்சியின் கருத்துக்கு அமைச்சர் எதிராக செய்கிறார் என இவ்வாறு கூறினார்
பி.ரஹ்மான்.
கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.