Tamilnadu news in tamil: கொரோனா தொற்றின் 2ம் அலை இந்தியாவையே உலுக்கி வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்ககளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2013ம் ஆண்டு டிஐஜி இருந்து ஓய்வு பெற்றவரான ஜான் நிக்கல்சன், தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)