ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வட தமிழ்நாடு மாநில கோரிக்கை; பாமக கோரிக்கைக்கு பெருகிய ஆதரவும் எதிர்ப்பும்

மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், முறையான ஆட்சி நடத்துவதற்கும், நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதிலும் சிக்கல் உள்ளது.

தமிழகத்தை எளிமையான முறையில் ஆட்சிப் புரியவும், அனைவருக்கும் சமமாக நலத்திட்டங்கள் கிடைத்திடவும், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியை வட தமிழ்நாடு மாநிலமாக பிரிக்க வலியிறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் வட தமிழ்நாடு குறித்த குறிப்புகள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சிறியவயே அழகானவை எனவும் இந்தியாவில் பல மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தையும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் கோரிக்கைகளாக ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி அன்று ராமதாஸ், உலகின் 150 நாடுகளில் 50 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளன. மீதமுள்ள 140 நாடுகளில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளன. ஆனால், இந்தியாவின் பல மாவட்டங்களின் மக்கள் தொகையே 50 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையிலும் இந்த செய்தி இடம்பெற்றிருந்தது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், முறையான ஆட்சி நடத்துவதற்கும், நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதிலும் சிக்கல் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட சில மாவட்ட மக்களே அனைத்து விதமான வளங்களையும் அனுபவித்து வருவதாகவும், சில மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அதன் சாரம்சம் இருந்தது. இந்த தகவல்களை #SmallisBeautiful என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் வட தமிழ்நாடு மாநிலக் கோரிக்கையை ட்விட்டரில் #WeNeedNorthTN என்ற ஹேஷ்டேக் மூலம் விவாதித்து வருகின்றனர். தற்போது, இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டடிங்கில் இடம்பிடித்துள்ளது.

வட தமிழ்நாடு கோரிக்கையை மையப்டுத்தி பாமக வினர் ட்விட்டரில் பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

‘வானிலை நிலவரமே வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று தான் சொல்கிறார்கள். இயற்கையே இந்த பிரிவைத் தான் விரும்புகிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அண்ணல் அம்பேதக்ர் சிறிய மாநிலமே சிறப்பானது என கூறியுள்ளார் என, அவரது புகைப்படத்துடன் கூடிய மற்றுமொரு ட்விட்டர் பதிவும் #WeNeedNorthTN என்ற ஹேஷ்டேக்கில்ன் ட்ரண்டிங்கில் இருந்து வருகிறது.

‘தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடைசி 10 இடங்கள் வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களே பிடித்து வருகின்றன. வட தமிழ்நாடு பிரிக்கப்பட்டால், இந்த நிலை மாறும். கல்வி அனைவருக்கும் சேரும். அதற்கான வளர்ச்சி பணிகளை செய்யவும் சிறப்பாக இருக்கும்,’ என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

பாமக வினரின் இந்த கோரிக்கைக்கு பெருகி உள்ள ஆதரவுக்கு இணையாக எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. வட தமிழ்நாடு மாநிலம் கோரிக்கை எழும்ப, கொங்கு மண்டல நாடு வேண்டும் எனவும், தமிழ்நாடு என்பதை யாராலும் பிரிக்க இயலாது என்ற குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu pmk north tn state twitter trending

Next Story
பிணம் தின்னி கழுகுகளுக்கு பேச கற்றுக் கொடுக்க முடியாது: கொளத்தூர் மணி ஆவேசம்Dravidar Viduthalai Kazhagam, Kolathur Mani warns Naam Tamilar Katchi members, கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம், நாம் தமிழர் கட்சி, Kolathur Mani, சீமான், social media attacks, tamil nadu political parties, seeman
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X