Tamilnadu Republic Day Celebration Update : நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த குடியரசு தினவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடுமையாக கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டின் 73-வது குடியரசு தின விழாவான இன்று சென்னை மெரினா கடற்கரையில், தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவி காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழக்கமாக குடியரசு தினவிழாவில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், குடியரசு தின விழாவில், பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வழக்கமாக ஒரு மணி நேரம் நடைபெறும குடியரசு தின விழா நிகழ்ச்சி தற்போது 35-நிமிடங்களாக குறைக்கப்பட்டது.
சமீபத்தில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி, முதல்முறையாக குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில், மும்படை தலைமை அதிகாரிகள், தமிழக டிஜிபி உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து முப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆளுநருக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியினை
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 26, 2022
ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். pic.twitter.com/oVI1WpK9l0
இதனைத் தொடர்ந்து சென்னையின் வரலாற்றை பறைச்சாற்றும் விதமாக தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் டெல்லி குடியரசு தின விழாவிற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன. இதில் முதல் ஊர்தியாக தமிழக இசைக்கல்லூரி மாணவர்கள நாதஸ்வர இசை மற்றும் முதல்வர் ஸ்டாலின், படத்துடன் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஊர்தி சென்றது.
அதனைத் தொடர்ந்து வேலு நாச்சியார், மருது சகோதர்கள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பொரியார், காயிதே மிலத், ராஜாஜி, இரட்டை மலை சீனிவாசன், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த ஊர்திகள் சென்றன.
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்கள். pic.twitter.com/ZuYLOPtWU4
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 26, 2022
முன்னதாக, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வீரதீர செயல்களில் ஈடுபட்ட தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு, அண்ணா மற்றும் காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழக்கப்பட்டது. மேலும் திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு சிறநத காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டது.
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். pic.twitter.com/kM3F18Cznt
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 26, 2022
இந்நிலையில், டெல்லியில் குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் இன்று முதல் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லபட உள்ளது. இந்த நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் தொடங்கி வைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “