/indian-express-tamil/media/media_files/2025/11/04/arul-and-balu-2025-11-04-21-44-41.jpg)
வடுகத்தம்பட்டியில் பா.ம.க தொண்டர்களை எம்.எல்.ஏ அருள் தலைமையிலான கும்பல் தாக்கி சொலை செய்ய முயன்றதாக கூறியுள்ள அன்புமணி தரப்பின் பா.ம.க வழக்கறிஞர் பாலு, அமைதியை குலைக்கும் அருளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருக்கும பா.ம.க.வில் தற்போது அப்பா ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே அதிகார மோதல எழுந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் நிர்வாகி நியமிப்பதும், அதை எதிர்த்து ராமதாஸ் நிர்வாகியை நியமிப்பது என கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல்கள் அதிகரித்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இதனால் பா.ம.க. அன்புமணி, பா.ம.க. ராமதாஸ் என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே சேலம் மாவட்டத்தில், பா.ம.க எம்.எல்.ஏ அருள் ராமதாஸின் ஆதரவாளராக இருக்கும் நிலையில், இவருக்கும் அன்புமணி தரப்பில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மோதல் போக்க வெடித்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், காவல்துறை முன்னிலையிலே எங்கள் கட்சி ஆட்களை அருள் ஆட்கள் சராமாரியாக தாக்கி, காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அமைதியை குலைக்கும எம்.எல்.ஏ அருளை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
இது குறித்து வழக்கிறஞர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து கடந்த ஜூலை மாதம் நீக்கப்பட்ட சேலம் அருள், அப்போதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவது, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது, பொது அமைதியை குலைப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சேலம் அருள், கட்சிக் கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளது. ஆனால், அதன் மீது இன்று வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேலம் அருள் கடந்த சில வாரங்களாகவே எங்கு சென்றாலும் வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இன்று கூட வடுக்கத்தம்பட்டி மந்தைகுட்டையில் மாற்றுத்திறனாளி இராஜேஷ்குமாரை தாக்கியதற்காக சேலம் அருளையும், அவரது கும்பலையும் காவல்துறை கைது செய்திருந்தால் அடுத்தடுத்த வன்முறைகளில் அந்தக் கும்பல் ஈடுபட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கும்.
வடுக்கத்தம்பட்டியில் இரு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது சேலம் அருள் தலைமையிலான வன்முறை கும்பல் நடத்திய தாக்குதல்களும் காவல்துறையினர் முன்னிலையில் தான் நடந்துள்ளன. வன்முறை நிகழ்வுகளை தடுக்க வேண்டிய காவல்துறையினரே வன்முறை கும்பலுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. அந்தக் கடமையிலிருந்து காவல்துறை தவறக் கூடாது.
அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், தொடர்ச்சியாக வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வரும் சேலம் அருளையும், அவரது கூட்டாளிகளையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். பொது அமைதிக்கு தொடர்ந்து பங்கம் ஏற்படுத்தி வரும் சேலம் அருளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us