scorecardresearch

குதிரை ரேஸ் விரோதம்: திருச்சியில் வாலிபர் கொலை

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trichy
Trichy

திருச்சி உறையூரில் பட்டப் பகலில் வாலிபர் ஒருவரை மர்மக்கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (28). குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்த இவர், இன்று நண்பகல் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மூன்று மர்ம ஆசாமிகள் அருகில் வந்து சண்முகத்தை தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகம் அங்கிருந்து வேகமாக ஓடினார். அவரை மூன்று மர்ம ஆசாமிகளும் பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து அங்கும் இங்குமாக ஓடினர். உயிருக்கு பயந்து ஓடிய சண்முகம், அந்தப் பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் நுழைந்தபோது அவரை அங்கு வழிமறித்து மூன்று பேர் அரிவாளால் வெட்டினர்.

இந்த சம்பவத்தில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்துபரிதாபமாக மரணமடைந்தார். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்துஉறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குதிரை ரேஸ் பந்தயம் தொடர்பாக இந்த கொலை நடந்து இருக்கிறது என்று தெரிய வந்தது தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறையூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu trichy horses race youngman murder in city