Advertisment

ஸ்ரீரங்கம், சமயபுரம் சித்திரை திருவிழா: திருச்சி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாக்கள் அடுத்தடுத்த நாளில் நடைபெற உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samayapuram

சமயபுரம்

திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாக்களை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு (18.04.2023) அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இவ்விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு (29.04.2023) சனிக்கிழமையன்று பணி நாளாக செயல்படும்.

இதே போன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (19.04.2023) புதன்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (13.05.2023) சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

முன்னதாக நம்பெருமாள் விருப்பன் (சித்திரை தேர்) திருநாள் திருவிழாவுக்காக திருத்தேருக்கு ஸ்தம்ப ஸ்தாபனம் (முகூர்த்த கால் நடுதல்) நிகழ்ச்சி இன்று பங்குனி மாதம் 27-ஆம் தேதி (10.04.2023) திங்கட்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சுபயோகம் கூடிய சுப தினத்தில் மிதுன லக்னத்தில் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கோயில் கண்காணிப்பாளர்கள் கோபல கிருஷ்ணன், சரண்யா, வெங்கடேசன், உதவி கண்காணிப்பாளர் மோகன், மணியக்காரர் ஸ்ரீதர், நிலப்பிரிவு பாலசுப்பிரமணியன், கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதேபோல், உலகப்பிரசித்தி பெற்ற சமயபுரம் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. கோவில் குருக்கள் கொடிமரத்தில் அம்மன் படம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

மொத்தத்தில் திருச்சி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம். அதேநேரம் பொதுத்தேர்வுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment