தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்டோபர் 27) நடந்து முடிந்த நிலையில், இந்த மாநாட்டுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளில் நிறைகளை விட குறைகளே அதிகம் உள்ளது. குறிப்பாக மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு அத்தியவசிய தேவையான குடிநீர் பற்றாக்குறை முக்கியமானதாக இருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த அறிவிப்பின்போதே, தான் நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க உள்ளதாக விஜய் அறிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய், அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவை விட்டு விலக உள்ளது திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய், அடுத்து தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடி குறித்து சர்ச்சைகள் வந்திருந்தாலும், அதை பற்றி கண்டுகொள்ளாத விஜய், அடுத்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு தயாராகி வந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தபோது பொதுமக்கள் யாரும் திடலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனையடுத்து மாநாடு நடைபெறும் அக்டோபர் 27-ந் தேதி, காலை முதலே தொண்டர்கள் திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் திடலுக்கு வந்த தொண்டர்கள்
மாநாடு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தபோது, பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு அனுமதி இல்லாமததால், அனுமதி வழங்கப்பட்ட அக்டோபர் 27-ந் தேதி அதிகாலையே தொண்டர்கள் திடலுக்குள் திரண்டதாக அங்கிருந்த காவலர்கள் தெரிவித்தனர். மேலும் நேரம் ஆக ஆக தொண்டர்கள் வருகை கலைக்கட்ட தொடங்கிய நிலையில், அனைவரும் விஜய்க்கு ஆதரவான கோஷத்துடன் திடலுக்குள் என்ட்ரி கொடுத்தனர்.
திடலில், தொண்டர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்ய, மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆங்காங்கே தண்ணீர் டேங்க்ககள் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் தற்காலிக கழிப்பிடங்களும், அமைக்கப்பட்டிருந்தது. இப்படி வசதிகள் இருந்தாலும், திடல் கட்டமைப்பில் பல குறைபாடுகள் இருந்தது.
வெயிலின் தாக்கம்
மாலையில் தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொண்டர்கள் அதிகாலை முதலே திடலுக்கு வர தொடங்கினர். ஆனால் ஒரு சில மணி நேரங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தொண்டர்கள் அனைவரும் நிழலை நோக்கி ஓடத்தொடங்கினர். மேலும் பலர் சேரில் அமர்ந்தபடி மற்றொரு சேரை தங்களது தலையில் வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்தனர். அதேபோல் வெயிலின் தாக்கம் காரணமாக 2 தொண்டர்கள் தலையில் வேப்பிலை வைத்தபடி திடலில் என்ட்ரி கொடுத்தனர்.
தடுப்புகளை தகர்த்த த.வெ.க தொண்டர்கள்#TvkVijayMaanadu | #TVKThalaivarVijay pic.twitter.com/dWNJpmeMnv
— ELAYARAJA DHANDAPANI (@raja_viscom) October 28, 2024
மேலும் இந்த வெயிலின் தாக்கம் காரணமாக பலர் மயங்கி விழுந்த நிலையில், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 5 நிமிடத்திற்கு ஒருமுறை திடலில் ஆம்புலன்ஸ்’ சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதேபோல் வெயிலின் தாக்கம் காரணமாக பலர் திடலை விட்டு வெளியேறிய நிலையில், பைபாஸ் சாலைக்கு அந்தப்பக்கம், மர நிழலில் தங்கினர். இதன் மூலம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமமே த.வெ.க தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.
குடிநீர் பற்றாக்குறை
மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் குடிநீர் வசதிக்காக ஆங்காக்கே தண்ணீர் டேங்ககுகள் வைக்கப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. ஆனால் தொண்டர்கள் திடலுக்கு வருவது அதிகரித்தவுடன் டேங்கில் இருந்த தண்ணீர் காலியானது. அதன்பிறகு தண்ணீர் டேங்கில் நிரப்பப்பட்டதாக தெரியவில்லை. இதனை ஈடுகட்டும் வகையில் தொண்டர்களுக்கு ஒரு சிறிய தண்ணீர் பாட்டில், சிறிய பிஸ்கட் பாக்கெட், சிறிய மிக்சர் பாக்கெட் அடங்கிய பார்சல் கொடுக்கப்பட்டாலும், வெயிலின் தாக்கம் காரணமாக, அதில் இருந்த தண்ணீர் ஒரு நபருக்கு போதுமானதாக இல்லை.
இதன் காரணமாக பலர் திடலுக்கு உள்ளே வரும்போதே தண்ணீர் பாட்டிலுடன் வந்த நிலையில், தண்ணீர் கிடைக்காதவர்கள், வெளியில் சென்று தண்ணீர் தேட தொடங்கினர். ஆனாலும், திடலுக்கு வெளியே சொல்லும் தொண்டர்களின் எண்ணிக்கையை விட உள்ளே வரும் தொண்டர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக திடல் வேகமாக நிரம்பியது.
த. வெ. க மாநாட்டுக்குப் பின் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த தொண்டர்கள்! pic.twitter.com/X8cjLaU5vB
— Marty ✍️ (@MartinJeyaraj07) October 28, 2024
கட்டுப்பாடுகளை தகர்த்த தொண்டர்கள்
அதிகாலை முதல், தொண்டர்கள் திடலுக்குள் வர தொடங்கினாலும், மாநாடு தொடங்கும் நேரம் நெருங்க நெருங்க, தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில், மாநாடு தொடங்க சிறிது நேரம் இருந்தபோது, மாநாட்டு திடலுக்குள் அவசர அவசரமாக தொண்டர்கள் நுழைய தொடங்கினர். இதன் காரணமாக சுவற்றின் மீது ஏறியும், தடுப்பு வேலிகளை தகர்த்தும் திடலுக்கு உள்ளே வர தொடங்கினர். காவல்துறையினர் எவ்வளவோ தடுத்தும் தொண்டர்களின் செயலை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதேபோல் மாநாடு தொடங்கிய சிறிது நேரத்தில், அங்கு எல்.இ.டி டிவிக்காக மேடைகளில் ஏறிய தொண்டர்களை கட்டுப்படுத்துவதும், பெரிய சவாலாக இருந்தது. மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாடு முதல் ஒரு மணி நேரம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு த.வெ.க கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு தளபதி விஜய்க்கு நினைவு பரிசு வழங்கப்பட்ட நிலையில், சுமார் 5.30 மணியளவில் உரையாற்ற தொடங்கிய விஜய், முக்கால்மணி நேரம் உரையாடினார்.
கடுமையான போக்குவரத்து பாதிப்பு
சரியாக மாலை 6.45 மணிக்கு மாநாடு முடிந்த நிலையில், தொண்டர்கள் அனைவரும் ஒரே நேரத்தில திடலில் இருந்து வெளியேற தொடங்கியதால், சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 7 மணியளவில் தொடங்கிய இந்த போக்குவரத்து பாதிப்பு, அதிகாலை 3 மணிவரை தொடர்ந்தது. ஆமை வேகத்தில் நகர்ந்த வாகனங்களால், வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் பலரும் தங்கள் வீடுகளுக்கு செல்ல தாமதமானது. வி.சாலை கிராமத்தில் இருந்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி வரை போக்குவரத்து பாதிப்பு இருந்துது.
குறிப்பாக மாநாட்டுக்கு வந்த வேன்கள், சாலையின் ஓரத்தில் பார்க்கிங் செய்து வைத்திருந்ததும் போக்குவரத்து பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. இடையில் ஒரு சில இடங்களில் காவல்துறையினர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் போகுவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலை 3 மணிக்கு தொடங்கி 6.30 வரை சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்க அதிகாலை முதலே தொண்டர்கள் வந்த நிலையில், மாலையில் மாநாடு முடிந்தாலும், வி.சாலைக்கு அருகில் இருந்து வந்த தொண்டர்கள் கூட தங்கள் வீடுகளுக்கு செல்ல கடுமையான சிரமத்தை எதிர்கொண்டனர். ஒட்டுமொத்தமாக மாநாட்டில், நிறை என்று சொல்லவேண்டுமானால் மருத்துவக்குழு மட்டுமே சரியாக பணியாற்றியதாக சொல்லலாம். மயங்கி விழுந்த பலருக்கும் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடைந்த சேர்கள், சேதமடைந்த மாநாடு பகுதி
மாநாடு முடிந்து வீடு திரும்பிய தொண்டர்கள், மாநாடு நடந்த திடலில், சேர்களை உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.