/indian-express-tamil/media/media_files/2025/09/20/vijay-2025-09-20-11-42-05.jpg)
பிரச்சாரத்தின்போது நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு, மனு அளித்திருந்த நிலையில், இது குறித்து மாவட்ட எஸ்.பியை அணுகுமாறு, டி.ஜி.பி அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில், தனது கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். இதற்காக தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ள விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் முதலில் நாமக்கல் மாவட்டத்தில் பேசிய விஜய், அடுத்து கரூர் சென்றபோது வடி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பிரச்சார இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
அதே சமயம், தாமதமாக வந்தாலும் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது, ஒரு குழந்தை காணாமல்போனது என பல சம்பவங்கள் நடந்த நிலையில், கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் அதிகமாக மக்கள் பலரும் தரையில் விழுந்துள்ளனர். இதில் பலர் காயமடைந்த நிலையில், 41 பேர் மரணமடைந்தனர். இந்த நிகழ்வு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் நடக்கும்போது சென்னை சென்றுவிட்ட விஜய், தவெக கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து அறிக்கை மூலமாக இரங்கல் தெரிவித்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே, சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.
இந்நிலையில், விஜய் தான் கரூர் செல்ல வேண்டும் என்று கூறி அதற்காக அனுமதி கேட்டு டி.ஜி.பி அலுவலகத்தில் கட்சியின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த கடிதத்தை பரிசீலித்த காவல்துறை டி.ஜி.பி அலுவலகம் சார்பில், விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், செல்லும் வழி, நிகழ்ச்சிகள் குறித்த விபரத்தை எஸ்.பியிடம் சமர்பிக்க வேண்டும். விபரங்கள் அளித்த பிறகு பாதுகாப்பு, முன்னேச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பியை அணுகுமாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.