Advertisment

ரேம்ப் வாக் மேடை: சி.சி.டி.வி கண்காணிப்பு; த.வெ.க மாநாடு பணிகள் நிலவரம் என்ன? - நேரடி ரிப்போர்ட்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், என்னென்ன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK Conference

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கு மேடை மற்றும் இதர வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய். தொடக்கத்தில் பல விமர்சனங்கள் மற்றும் உருவ கேலிகளை எதிர்கொண்டிருந்தாலும், அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய விஜய், மக்கள நலப்பணிக்காக மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார்.

விஜய் அரசியல் கட்சி தொடக்கம்

மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்த விஜய், தற்போது அரசியலில் களமிறங்க திட்டமிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதற்கு முன்பே விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் தீவிர அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள உள்ளார்.

TVK Conference1

சமீபத்தில் வெளியான கோட் படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்த படமாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன், நடிப்பில் இருந்து விலகி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். விஜயின் அரசியல் கட்சி குறித்து மற்ற அரசியல் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், விஜய் அதை கண்டுகொள்ளாமல், தனது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

அடுத்தடுத்து தடைகள்

கட்சி தொடங்கிய ஓரிரு வாரத்தில், தனது கொடியை அறிமுகப்படத்தினார் விஜய். இந்த கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த முயற்சித்த விஜய்க்கு காவல்துறையில் இருந்து அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் முதலில், தேதி அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி அக்டோபர் 27-ந் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் தனது அரசியல் நிலைபாடு, கட்சியின் கொள்கை, மற்றும் தனது கொடியின் அர்த்தம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வி.சாலை கிராமத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அங்கேயே தங்கி மாநாடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொண்டர்களுக்கு மத்தியில், விஜய நடந்துகொண்டே பேசும் வகையில் ரேம்ப்வாக் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநாடு நடக்கும் இடத்திற்கு இரு பக்கத்திலும் ஒரு கி.மீ இடைவெளியில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளனர்.

TVK Conference1

மாநாட்டுக்கான கோட்டை மதில் சுவர் போன்ற, டிசைனுடன், யானை சின்னம் பொறிக்கப்பட்ட சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அதன் உள்ளே தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் இதர வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தற்காலிக கழிப்பறை, மற்றும் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், மாநாட்டுக்கு ஒரு நாளுக்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.மாநாடு நடைபெறும் இடங்கள் சி.சி.டி.வி மூலம் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இருக்கிறதா?

நடிப்பில் தீவிரம் காட்டிய விஜய், அரசியல் கட்சி தொடங்குவதற்கு முக்கிய காரணம் ராகுல்காந்தி தான் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூட, ராகுல்காந்தி கொடுத்த ஐடியாவில் தான் விஜய் கட்சி தொடங்கியிருப்பதாக கூறியிருந்தார். இதனால் ராகுல்காந்தி இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என்றும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Tamilnadu Thalapathy Vijay
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment