/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-in-2025-09-29-08-20-13.jpg)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 27) இரவு நடந்த த.வெ.க தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோக நிகழ்வின் நிலக்காட்சிகள் இன்னும் கதைகள் சொல்கின்றன: குழந்தைகளின் செருப்புகள், உடைந்த இரும்புக் கிரில்கள், கிழிந்த கட்சிக் கர்ச்சீப்கள், மக்கள் ஏறி நசுங்கியதால் முறிந்த சன்ஷேடுகள் என அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
பேரணிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கட்சியினர் அல்ல; தங்கள் பிடித்தமான நடிகரை ஒருமுறையாவது பார்க்கத் துடித்த ரசிகர்கள். நேற்று முன்தினம் இந்த நிகழ்வின்போது விஜய்யின் பிரச்சார வாகனத்துக்குப் பின்னால் நின்றிருந்த கரூரைச் சேர்ந்த பேருந்து கட்டுமானத் தொழிலாளி சுபாஷ், நடிகர் வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே சோர்வுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
விஜய்யின் வாகனம் அந்த இடத்துக்கு வந்த பிறகு, நெரிசல் அதிகமானது. கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஏற்கெனவே நிரம்பி வழிந்த தெருவில் அவரது வாகனத்துக்காக வழி ஏற்படுத்தியதுதான் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அப்போது தான், மக்களின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. அந்த சமயத்தில், ஒரு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது, ஒரு பெண் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ்கள் அழைக்கப்பட்டன, ஆனால், அவை சம்பவ இடத்துக்கு வர முடியவில்லை. அதனால் மயங்கி விழுந்தவர்கள் அருகில் உள்ள தெருக்களுக்கு நகர்த்தப்பட்டனர்.
முதல் ஆம்புலன்ஸ் வந்தபோது, அட்டண்டர் நிறைய பேர் இருந்தனர். விஜய் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததால், ஆம்புலன்ஸ் நகர்வதற்கு இடமின்றி, அதுவே நெரிசலுக்கு மேலும் ஒரு காரணமாகிவிட்டது" என்றார் சுபாஷ். உள்ளூர் தையல் தொழிலாளியான சௌந்தர்ருக்கு இந்தத் துயரம் தனிப்பட்டதாக இருந்தது. மயங்கி விழுந்தவர்களில் அவருடைய அண்ணனும் ஒருவர். "அவர் அருகில் இருந்த தெருவுக்கு நகர்த்தப்பட்டார், அங்கு பெண்கள் தண்ணீர் கொடுத்தனர். அந்த கடுமையான வெப்பம் மற்றும் நெரிசலில் ஒரு வாய் தண்ணீர் குடிப்பதற்காக மேலும் பலர் விரைந்தனர்," என்று அவர் கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/29/vijay-rally-stampede-2025-09-29-08-20-13.webp)
பேரணி நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் இல்லத்தரசி அனுபமா, தங்கள் வீடு ஒரு தற்செயல் அடைக்கலமாக மாறியதாகத் தெரிவித்தார். "மக்கள் கிரில் கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்; உள்ளே இருந்த எங்களுக்கே சுவாசிக்க கஷ்டமாக இருந்தது. மக்கள் எங்கள் மாடிகளையும் சன்ஷேடுகளையும் ஆக்கிரமித்தனர். அதில் ஒரு பகுதி உடைந்தது. நாங்கள் அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தோம், மயங்கி விழுந்த சில பெண்களை உள்ளே கொண்டு வந்து சர்க்கரை மற்றும் தண்ணீர் கொடுத்து எழுப்பினோம். சிலர் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர்," என்று அவர் கூறினார்.
விஜய் வருவதற்கு முன்பே பிரச்சினைகள் தொடங்கியதாக அனுபமா கூறுகிறார்: "அவருடைய வாகனம் இந்த இடத்துக்கு வருவதற்கு முன்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிறகு ஆம்புலன்ஸ்கள் வந்தபோது, மேலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன." அவருடைய வீட்டிற்கு வெளியே ஒரு மரக்கிளையில் சுமார் 15 பேர் அமர்ந்திருந்தனர். அந்தக் கிளை பின்னர் முறிந்து விழுந்ததில், குறைந்தது 5 பேருக்கு படுகாயத்தை ஏற்படுத்தியது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை, அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தனர். இந்தச் சம்பவத்தை "மனிதநேயமற்ற கும்பல்" என்று அனுபமா விவரித்தார்.
உயிரிழந்தவர்களில் பிருந்தா, அரவக்குறிச்சியைச் சேர்ந்த 22 வயது ஜவுளி ஆலைத் தொழிலாளி. விபத்து காரணமாக அவரது கணவர் சுதன் இரண்டு மாதங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார். இரண்டு வயது மகளை உறவினர்களிடம் விட்டுவிட்டு, நண்பர்களுடன் பேரணிக்கு வந்திருந்தார் பிருந்தா. "அவள் ரசிகர் மன்ற உறுப்பினரும் அல்ல; அவரைப் பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள்," என்று அவரது உறவினர் மங்களா கூறினார். அரசு உதவி எண் மூலம் புகைப்படம் கிடைத்த பிறகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு அந்தக் குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டனர்.
கரூர் மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கு வெளியே, பிருந்தாவின் குழந்தை, சோகத்தில் மூழ்கியிருந்த குடும்பப் பெண்களுடன் மாம்பழச் சாற்றைக் குடித்துக் கொண்டிருந்தது. மேலும், அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்த கோகுலஸ்ரீ மற்றும் ஆகாஷ் போன்ற 20களின் முற்பகுதியில் இருந்த இளம் ரசிகர்களும் பேரணிக்குச் சென்று திரும்பவில்லை. "போக வேண்டாம் என்று சொன்னோம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை" என்று கோகுலஸ்ரீயின் தாயார் கூறினார்.
உள்ளூர்வாசிகள், இரண்டு நாட்களுக்கு முன்பு அதே வேலாயுதபுரம் பகுதியில், ஏறக்குறைய இதே அளவிலான கூட்டத்தை ஈர்த்த எடப்பாடி கே. பழனிசாமியின் அதிமுக பேரணியில் இருந்ததை விட, விஜய்யின் நிகழ்வில் காவல்துறைப் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்ததாகக் கூறினர். அந்த நிகழ்வு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் முடிந்தது. "போலீஸார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் அனுமதி வழங்கப்பட்ட இடமும் தவறானது" என்று ஒரு குடியிருப்புவாசி தெரிவித்தார்.
வேலாயுதம்புரம் பகுதி குறுகிய சாலையும், புதிதாகத் திறந்த வடிகால் கால்வாயும் சனிக்கிழமை மாலை ஒரு பொறி போல மாறியது; மக்கள் அதற்குள் விழுந்தனர். கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீர்வாதம், போதுமான பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லை என்ற கூற்றை மறுத்தார். "இங்கே மூன்று ஏ.டி.எஸ்.பி.க்கள், நான்கு டி.எஸ்.பி.க்கள், 58 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மத்திய மண்டல ஐ.ஜி. உட்படப் பணியமர்த்தப்பட்டிருந்தனர்," என்று அவர் கூறினார்.
முன்னதாக நாமக்கல்லில் நடந்த பேரணிக்கு 270 போலீஸாரும், கடந்த வாரம் திருச்சியில் நடந்த கூட்டத்துக்கு 650 போலீஸாரும் இருந்ததாக அவர் தெரிவித்தார். கரூரில், 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தாலும், சுமார் 20,000 பேருக்கு 500 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இது "ஒரு அதிகாரிக்கு 20 பேர் என்ற விகிதம், வழக்கமான ஒருவருக்கு 40 என்ற விகிதத்தை விட இது சிறந்தது" என்று அவர் கூறினார். "1,000 போலீஸார் இருந்தாலும்கூட, இத்தகைய கடினமான கூட்டத்தைக் கையாள்வது சவாலாக இருந்திருக்கும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/29/vijay-rally-stampede-karur-2025-09-29-08-20-13.webp)
அவர் மேலும் கூறுகையில், இரண்டு ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்தன, மேலும் நெரிசல் பற்றிய தகவல்கள் வந்தவுடன் மேலும் 10 ஆம்புலன்ஸ்கள் அழைக்கப்பட்டன. மேலும், விஜய்யின் குழுவினர் போலீஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டதாகவும் டேவிட்சன் கூறினார். பேசும் இடத்திலிருந்து குறைந்தது 50 மீட்டருக்கு முன்பே வாகனங்களை நிறுத்தும்படி போலீஸார் அவர்களிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் தாங்கள் முடிவு செய்த சரியான இடத்துக்கு உள்ளே செல்ல வேண்டும் என்று அமைப்பாளர்கள் வலியுறுத்தினர். அந்த இடத்தை அடைந்த பிறகும், தலைவர் சுமார் 10 நிமிடங்களுக்கு வாகனத்தை விட்டு வெளியே வரவில்லை, இது கூட்டத்தை மீண்டும் அமைதியின்மைக்கு உள்ளாக்கியது" என்று அவர் கூறினார்.
மாலை 6 மணிக்கு, விஜய்யின் கான்வாய் அந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் குறைவாக இருந்த ஒரு மேம்பாலத்தை அடைந்தது, ஆனால் மைதானத்தை அடைய மேலும் ஒரு மணிநேரம் ஆனது. ஏற்கெனவே நெரிசல் மிகுந்த தெருவில் வாகனத்தைத் திறந்து செல்ல வேண்டியிருந்தது. அவரது வாகனத்துக்காக மக்கள் வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது நெரிசல் நிலைமை தொடங்கியது. இது கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுவதற்கு வழிவகுத்தது.
மோசமான திட்டமிடல் மற்றும் போதுமான வசதிகள் இல்லாதது ஆகிய இரண்டும் நிலைமையை மோசமாக்கியது. பஸ் நிலையம் ரவுண்டானா மற்றும் கலங்கரை விளக்கப் பகுதி உட்பட நான்கு பரபரப்பான சந்திப்புகளில் பேரணி நடத்த த.வெ.க -வுக்கு அனுமதி மறுத்த காவல்துறை, அதற்குப் பதிலாக வேலாயுதபுரம் பகுதியில், அனுமதித்தது. விஜய் நண்பகல் வருவார் என்று த.வெ.க அமைப்பாளர்கள் அறிவித்ததால், மக்கள் காலை 9 மணி முதல் கூடத் தொடங்கினர்.
மதியம் 2 மணிக்குள் 4,000 க்கும் குறைவானவர்களே இருந்தனர். ஆனால், அவர் நாமக்கல்லில் இருந்து வந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் பரவியதால், மாலை 4 மணிக்குள் கூட்டம் பெருகியது. மேலும், நாமக்கல்லில் இருந்து குறைந்தது 5,000 பேர் அவரைக் பின்தொடர்ந்து வந்திருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us