Advertisment

கோவையில் ரூ. 200 கோடியில் தொழில்நுட்ப மையம்: மத்திய அரசு திட்டம் என்ன?

மேலும் நாடு முழுவதும் இதுபோன்ற 15 மையங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் புதுச்சேரியில் ஒரு மையம் திறக்கப்பட்டது.

author-image
Janani Nagarajan
New Update
கோவையில் ரூ. 200 கோடியில் தொழில்நுட்ப மையம்: மத்திய அரசு திட்டம் என்ன?

கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (கோடிசியா) தலைவர் வி. திருஞானம் படி, எம்எஸ்எம்இ வளர்ச்சி மற்றும் வசதி அலுவலகத்தின் இணை இயக்குநர் எஸ் சுரேஷ் பாபுஜி ஆகியோர், சமீபத்தில் கோடிசியாவால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திட்டங்கள் குறித்த கூட்டத்தில் இந்த திட்டத்தை அறிவித்தனர்.

Advertisment

publive-image

மத்திய அரசு முழு நிதியுதவியுடன், அரசூரில் 11 ஏக்கரை இந்த திட்டத்திற்காக வழங்கியது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்பத்தூரில், மாநிலத்தில் MSMEகளுக்கான இரண்டாவது தொழில்நுட்ப மையத்தை அமைக்க முடிவெடுத்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் இதுபோன்ற 15 மையங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் புதுச்சேரியில் ஒரு மையம் திறக்கப்பட்டது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு இங்கு ₹200 கோடி செலவில் தொழில்நுட்ப மையத்தை அமைக்கவுள்ளது.

இது புதுமையான தொடக்கங்களை ஊக்குவிக்கும் மற்றும் அலகுகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்பற்றி திருஞானம் கூறியதாவது, "இங்கு மையத்தை அமைப்பதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூர் ஜவுளி மற்றும் பொறியியல் போன்ற பல துறைகளில் செயல்படும் ஒரு பன்முக தொழில்துறை மையமாக இருந்தது. தொழில்நுட்ப மையம் அனைத்து துறையினருக்கும் பயனளிக்கும்", என்றார்.

Tamil Nadu Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment