/indian-express-tamil/media/media_files/2025/01/29/PiuC2GTqNkSNXhjNryGJ.jpg)
தாமிரபரணி ஆற்றை காக்க களமிறங்கிய தன்னார்வலர்கள்
/indian-express-tamil/media/media_files/2025/01/29/kRm15DR7md4urwZwNdD1.jpg)
திருநெல்வேலி அருகன் குளத்திலுள்ள ஜடாயுப் படித்துறையில் புதன்கிழமை தை அமாவசை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்வானது சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் வி.எம்.சத்திரம் டெவலெப்மெண்ட் டிரஸ்ட், அருகன் குளம் &நாராயணம்மாள் புரம் ஊர் பொது மக்கள், அருள்மிகு இராமலிங்கசுவாமிகோவில் திருப்பணி அறக்கட்டளை மற்றும் இந்து ஆலயம் பாதுகாப்பு இயக்கம் ஆகியோர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/hRGhygoG1hSeageZX8Is.jpg)
ஜடாயு படித்துறை
நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து பகுதிக்கு அருகிலுள்ள அருகன்குளம் கிராமத்தில் பழைய இராமேஸ்வரம் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வழிபட்டு, இறந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து ஜடாயு தீர்த்தமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் நீராடினால் புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரும் திதி தர்ப்பணம் செய்ய இங்கு வருகின்றனர். குறிப்பாக, தை அமாவாசை நாளான நேற்று, தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜடாயுப் படித்துறையில் கூடியிருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/BYaZn3M35ZljuReJPTtk.jpg)
விழிப்புணர்வு பணி
வி.எம்.சத்திரம் டெவலெப்மெண்ட் டிரஸ்ட், அருகன் குளம் நாராயணம்மாள்புரம் ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து ஆலயம் பாதுகாப்பு கமிட்டி ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். இதில் தாமிரபரணி ஆற்றின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்கெனவே ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தாமிரபரணி ஜடாயு படித்துறையில் தூய்மைப் பணியானது நடைபெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/XLmfHs2ZCetHych0xbxE.jpg)
சுகாதார பணி
ஆங்காங்கே 12 சிறுகுப்பை தொட்டிகளும் , 5 பெரிய குப்பை தொட்டிகளும் வைக்கபட்டு, தன்னார்வர்கள் மூலம் ஆற்றினுள் குப்பை போடுவது தடுக்கப்பட்டது. தை அமாவசைக்கு முன்பும் பின்பு ஜடாயு படித்துறையானது தன்னார்வர்கள் மற்றும் நாராணம்மாள்புரம் பேரூராட்சி மூலமாக தூய்மை செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/5C6cRaV5M5us7vlTMhDp.jpg)
போக்குவரத்து சீரமைப்பு
காவல்துறையினரும் தன்னார்வர்களும் இணைந்து போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைக்கு அருகிலும், காட்டு இராமர் கோவில் அருகிலும், தடுப்புகள் அமைக்கப்பட்டு நான்கு சக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டது. மேலும் ஜடாயு படித்துறைக்கு அருகில் தற்காலிக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு அங்கும், சாலையின் ஓரத்திலும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/WMvb8uS2FxBSTMkUTsdv.jpg)
அன்னதானம்
முன்னோர் வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு தகவல் அளிக்கும் வகையில் ஒலி பெருக்கி மூலம் தகவல்கள் அளிக்கப்பட்டது. மேலும் செல்போன், சாவி உள்ளிட்ட பொருட்களை தவறவிட்டவர்கள் தகவல் மையத்தை பயன்படுத்திக்கொண்டனர். அருள்மிகு இராமலிங்கசுவாமி கோவில் திருப்பணி அறக்கட்டளை சார்பாக அன்னதானம்வழங்கப்பட்டது. 125 கிலோ அளவிலான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு பக்கதர்களுக்குவழங்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/kQ7D5XPHOcKbWJRbJA5I.jpg)
இதுகுறித்து வி.எம்.சத்திரம் டெவலெப்மெண்ட் டிரஸ்ட்-ஐ சேர்ந்த மு.செந்தில் கூறும்போது, ”வி.எம்.சத்திரம் டெவலெப்மெண்ட் டிரஸ்ட், அருகன் குளம் நாராயணம்மாள்புரம் ஊர் பொதுமக்கள், அருள்மிகு இராமலிங்கசுவாமி கோவில் திருப்பணி அறக்கட்டளை மற்றும் இந்து ஆலயம் பாதுகாப்பு இயக்கம் ஆகியோர் இணைந்து ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தாமிரபரணி ஜடாயு படிதுறையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தை அமாவாசையான இன்றும் தன்னார்வல களப்பணியில் ஈடுபட்டோம்.. இந்த ஏற்பாடுகள் பக்கத்ர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பக்தர்கள், அர்ச்சர்கர்கள், காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.” என்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/ZafBoWGpAgRcvL56otsQ.jpg)
இதுகுறித்து கார்த்திக்கேயன் என்ற பக்தர் கூறும் போது,” எங்களோட முன்னோர்களுக்கு திதி கொடுக்க வந்திருக்கோம் இந்து ஆலய பாதுகாப்பு குழாமும், வி.எம்.சத்திரம் டெவலெப்மெண்ட் டிரஸ்ட்-ம் சேர்ந்து அருகன்குளம் ஜடாயு படித்துறையில் நல்ல முன்னேற்பாடு செய்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. மேலும் ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெறக்கூடிய உழவாரப்பணியில் கலந்து கொள்வதற்கு எங்களோட பெயரை பதிவு செய்தேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த தாமிரபரணி ஆற்றை பாதுகாப்போம்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.