என் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு

Thala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Actor Ajith Kumar Statement Against to Use His Photos At Political Events: நடிகர் அஜீத்குமார் இன்று (ஜனவரி 21) ஒரு அறிக்கை விட்டார். அதில் அவர் கூறிய விவரம் வருமாறு: ‘என் பெயரோ, புகைப்படமோ எந்த அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை. அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை யார் மீதும் திணிப்பது இல்லை.

மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை. இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன். எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. என் ரசிகர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ நிர்பந்தித்ததும் இல்லை, நிர்பந்திக்கவும் மாட்டேன்.

Read More: வரேன்னு சொன்ன ரஜினி வரவில்லை… வர மாட்டேன்னு சொல்ற அஜீத்..? அதிரடி அறிக்கை… ஆரவார ரெஸ்பான்ஸ்

என்னுடைய ரசிகர்கள், தங்கள் தனிப்பட்ட அரசியலுக்கு எனது பெயரை பயன்படுத்த வேண்டாம். அரசியல் நிகழ்வுகளில் எனது பெயரோ, படமோ இடம் பெறுவதை நான் விரும்பவில்லை.

நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் ரசிகர் இயக்கங்களை கலைத்தேன். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. ரசிகர்கள் கல்வி, தொழில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும்.’ என கூறியிருக்கிறார் அஜீத்.

இரு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் தமிழிசை முன்னிலையில் அஜித் ரசிகர்கள் சிலர் அந்தக் கட்சியில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதையொட்டி அஜீத் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close