நாட்டின் வரவு செலவு திட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1,2024ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் மு. அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வருகிற 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையை பிப்.12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தொடக்க உரை நிகழ்த்துவார்கள்.
இதையடுத்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.
பிப்.20ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கையும், 21ஆம் தேதி 2023-23 முன்பண மானிய செலவினங்களயும் தாக்கல் செய்யப்படும்” என்றார்.
இந்த நிலையில், இன்று சபாநாயகர் மு. அப்பாவு, தமிழக சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது, “கணினி, ஒலிப்பெருக்கி மற்றும் இருக்கைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு நடத்தினார்.
முன்னதாக பிப்.1ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்கையில், “ஒபிஎஸ்- இபிஎஸ் இருக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த அப்பாவு, “சட்டமன்றத்தில் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்ற அதிகாரம் சபாநாயகருக்குதான் உண்டு” எனப் பதிலளித்தார்.
மேலும் கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்தாண்டு சுமூகமாக சட்டப்பேரவை நடைபெறும் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“