தி சென்னை சில்க்ஸில் மீண்டும் ‘தீ விபத்து’!

4-வது தளத்தில் மீண்டும் தீ

தி சென்னை சில்க்ஸில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதால் கட்டடத்தை இடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. கிட்டத்தட்ட 36 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைக்கப்பட்டது. கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்க இருந்த நிலையில், 4-வது தளத்தில் மீண்டும் தீ எரியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் 4-வது தளத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன் காரணமாக கட்டடத்தை இடிக்கும் பணி நாளை தொடங்கும் என காவல் துறையினர் முடிவுசெய்துள்ளனர். கட்டடத்தை இடிக்கும் பணி அதிகாலை தொடங்குகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The chennai silks got fire again 4th floor picks fire

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com