சென்னை ஐகோர்ட்டில் பக்கோடா விற்கும் போராட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை கண்டித்தது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை கண்டித்தது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai High Court Advocates 'Pakoda' Protest

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் ‘பக்கோடா’ போராட்டம்…

2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கபடும் என தெரிவிக்கபட்டது.

அண்மையில் வானொலியில் பேசிய பிரதமர் மோடி பக்கோடா விற்கலாம் என தெரிவித்தார். பிரதமரின் இந்த கருத்திற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மத்திய அரசு உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்த தவறியதாகவும், பக்கோடா தொடர்பாக அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு எதிவித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் சீனிவாசராவ் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

வழக்கறிஞர் அரோக்கிதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள், பிரதமரின் இந்த கருத்து இளைஞர்களை வேதனையாடைய வைத்துள்ளதாகவும், மத்திய அரசு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தவறியுள்ளதாகவும் அதனை மறைக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் இந்த பேச்சு கண்டனத்திற் குரியது என வழக்கறிஞர் தெரிவித்தனர்.

பின்னர் சாலையில் இருந்த பொதுமக்களுக்கு பக்கோடா வழங்கி மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close