மூன்று நாடுகள் பங்கேற்கும் பிரமாண்ட "மலபார் கூட்டு போர் ஒத்திகை" வங்கக்கடலில் சென்னை அருகே துவங்கியது.
கடந்த 1992 முதல் இந்திய - அமெரிக்க போர்க் கப்பல்கள் பங்கேற்கும் "மலபார் கூட்டு போர் ஒத்திகை" நடைபெற்று வருகிறது. இரு நாட்டு போர்க்கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. இதனிடையே, இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய போது, அந்த காரணத்தால் இந்த போர் ஒத்திகை நிறுத்தப்பட்டது. கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை இந்த போர் ஒத்திகை நடைபெறவில்லை.
இதனையடுத்து, 2016-ஆம் ஆண்டில் இந்த "மலபார் கூட்டு போர் ஒத்திகை" மீண்டும் புத்துயிர் பெற்றது. அந்த ஆண்டு ஜப்பானும் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. அந்த ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, ஜப்பான் அதிகராப்பூர்வமாக பங்கேற்கும் முதல் நிகழ்வு இது. அதற்கு முன்பு, ஒரு முறை ஜப்பானும், ஒருமுறை ஆஸ்திரேலியாவும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான பிரமாண்டமான "மலபார் கூட்டு போர் ஒத்திகை" வங்கக்கடலில் சென்னை அருகே துவங்கியது. இந்த நிகழ்வில் மொத்தம் 21 கப்பல்கள் 95 <போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இதில்,, அமெரிக்காவின் "நிமிட்ஸ்" கப்பலும் பங்கேற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கப்பல் சென்னை வந்திருந்தது. இந்த கப்பலில் மட்டும் 75 விமானங்கள் உள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி விஸ்வஜித் தாஸ் குப்தா கூறுகையில், மூன்று நாடுகளின் கூட்டு ஒத்திகை வருங்கால சவால்களை எதிர்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்றார்.