Advertisment

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தி கார்டியன் திட்டம் தொடக்கம்: இதன் சிறப்பு என்ன?

கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக 11-வது ஆண்டாக நடைபெற்ற ரோஸ் தினத்தை முன்னிட்டு  புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களை சிறப்பு கவனத்துடன் சிகிச்சை வழங்கி பராமரிக்கும் பிரத்யேக பாலியேட்டிவ் கேர் மையம் தொடங்கப்பட்டது.

author-image
Jayakrishnan R
New Update
Guardian Project launched at KMCH Hospital

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

கோயம்புத்தூர் : புற்றுநோய் (Cancer) முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனத்துடன்  சிகிச்சை அளிக்கும் வகையில் "தி கார்டியன் எனும் திட்டத்தில்  பாலியேட்டிவ் கேர் எனும்  பிரத்யேக வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

புற்றுநோயுடன் மன உறுதியுடன் போராடி குணமடைந்தவர்களையும் நோயிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்களை பாராட்டும் வகையிலும் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக 11-வது ஆண்டாக நடைபெற்ற ரோஸ் தினத்தை முன்னிட்டு  புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களை சிறப்பு கவனத்துடன் சிகிச்சை வழங்கி பராமரிக்கும் பிரத்யேக பாலியேட்டிவ் கேர் மையம் தொடங்கப்பட்டது.

பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார். கே.எம்.சி.ஹெச் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த வார்டில் நோயாளிகளுக்கு சலுகை கட்டணங்களில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

பாலியேட்டிவ் கேர் என்ற இப்புதிய சேவைப்பிரிவின் மூலம் கேஎம்சிஹெச் அளிக்கும் புற்று நோய் மருத்துவம் மேலும் முழுமைபெற்ற சேவை மையமாகத் திகழ்வதையும்  "பாலியேட்டிவ் கேர்" என்ற மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தையும் மருத்துவமனையின்  செயல் இயக்குனர் அருண் பழனிசாமி எடுத்துரைத்தார்.

ரோஸ் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து கே.எம்.சி.ஹெச் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள். அவர்கள் குடும்பத்தினர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் 

கே.எம்.சி.எச்.மருத்து வமனையின் தலைவர் நல்லா ஜி.பழனிசாமி,உதவி தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி உட்பட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore Cancer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment