Advertisment

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Weather Updates- இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

author-image
Jayakrishnan R
New Update
Tamil nadu rain update

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu Weather Forecast | இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

Advertisment

அதன்படி இன்று தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை தென் மண்டல தலைவருக்காக மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை

அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பு நிலை இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.
தொடர்ந்து வருகிற 19ஆம் தேதி வரை, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3' செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில்,  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இவ்வாறு வானிலை தென்மண்டல இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

ரெட் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்

இதற்கிடையில் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும், மஞ்சள் அலர்ட்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  அதாவது வருகிற 20ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருசில இடங்களில் காற்றும் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamilnadu Weather tamilnadu rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment