பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட போலீஸ் : ஜாமீனில் வெளிவந்ததால் பரபரப்பு

தென்காசி மாவட்டத்தில் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டதால், நிலுவையின் உள்ள வழக்குகள் தொடர்பான பதிவுகளை சமர்பிக்குமாறு சங்கரன்கோயில் நீதித்துறை மாஜதிரேட்க்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் பஸ் பேருந்து நிலையத்தில், டிசம்பர் 3…

By: December 16, 2020, 12:20:04 PM

தென்காசி மாவட்டத்தில் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டதால், நிலுவையின் உள்ள வழக்குகள் தொடர்பான பதிவுகளை சமர்பிக்குமாறு சங்கரன்கோயில் நீதித்துறை மாஜதிரேட்க்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் பஸ் பேருந்து நிலையத்தில், டிசம்பர் 3 ம் தேதி நரிக்குரவா சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தவறாக நடந்துகொண்ட ஒரு  செய்தி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல வழக்கை மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

டிசம்பர் 4 ம் தேதி கைது செய்யப்பட்ட அந்த போலீஸ் கான்ஸ்டபிள் மீது கூடுதல் ஐபிசியின் 323, 506 (i) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் பிரிவு 4 வழக்கு தொடரப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுது. இதில், அந்த போலீஸ் கான்ஸ்டபிள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பட்டாலியனில் பணிபுரிந்து வருவதாகவும், நவம்பர் 18 முதல் அவர் பணிக்கு வரவில்லை என்றும் அறிக்கை சமர்பித்துள்ளார்.

இதனையடுத்து சங்கரன்கோயில் மாஜித்திரேட் முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளுக்கு, நீதிபதிகள் என்.குருபகரன் மற்றும் பி புகழேந்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அவருக்கு ஒரே நாளில் ஜாமீன் வழங்கி உத்தரவிடுள்ளது. ஆனால் “ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றங்களுக்கு ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்கு தொடரப்படும் நிலையில், போலிஸ் கான்ஸ்டபிள் மறுநாளே ஜாமீனில் வெளிவந்தது அதிர்ச்சியாக இருக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதில் இருந்து விடுவிக்கும் வரை அனைத்து விவரங்களையும் அளித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் சங்கரன்காயில் காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் புகாரளிக்கப்பட்ட குற்றங்கள் குறித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஒரு தனி பிரிவை அமைக்குமாறு மாநில அரசிடம் கேட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:The police constable misbehaved a women in tenkasi bus stand237390

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X