சாக்கடையைவிட மோசமாக நாறுகிறது தமிழக அரசியல்: இராமதாஸ் பேச்சு

அமைச்சர்கள் ஊழல் செய்வது குறித்து ஒரு ரேங்கிங் எடுத்தால் யார் முதல் இடத்தில் வருவாருனு தெரியுமா - எடப்பாடி தான் வருவார்

சென்னை மயிலாப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

எதைப்பற்றி பேசுறது எதைப்பத்தி பேசினாலும் வேதனையாகதான் இருக்கு. எங்கும் எதிலும் ஊழல் தான் இருக்கிறது. பெண்கள் மதுக்கு எதிராக போராடுகிறார்கள் அவர்களை கொச்சை வார்த்தையில் பேசுவது மிகவும் வருத்தமளிக்கிறாது.

சாக்கடை விட மோசமாக நாத்தம் வருகிறது இந்த ஆட்சியில். ஊழல் பன்னிட்டு ஒருத்தன் கணக்கு எழுதிவச்சுருக்கான் -விஜயபாஸ்கர்.

ரேங்கிங் போடுற முறையை ஒழிச்சுட்டாங்க. அமைச்சர்கள் ஊழல் செய்வது குறித்து ஒரு ரேங்கிங் எடுத்தால் யார் முதல் இடத்தில் வருவாருனு தெரியுமா – எடப்பாடி தான் வருவார்

போக்குவரத்து ஊழியர்களிடமும் திருடியிருக்கார்கள், ஊழல் செய்துயிருக்கிறார்கள். எவ்வளவு துணிச்சல் இருந்தா எலக்சன் கமிசனுக்கு போய் லஞ்சம் கொடுத்துறுப்பான் பாருங்க. ஜூலை 15 தேதி 1.76 லட்சம் கோடி பணம் ஊழல் செய்த வழக்கு குறித்து தீர்ப்பு வருகிறது. ஏற்கனவே ஒரு கட்சி இல்லாமல் போய்விட்டது, கோர்ட் தீர்ப்புக்கு பின்னர் காணாமல் போய்விடும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

முன்னதாக பேசிய அன்புமணி, ‘தமிழ்நாட்டில் எந்த பிரச்னை வந்தாலும், எந்த மக்களுக்கும் வந்தாலும் எந்த மூலையில்ளை வந்தாலும் அதுக்கு முதலில் குரல் கொடுப்பவர் இராமதாஸ்தான். கடந்த ஆண்டு மே 19 தேர்தல் முடிவுகள் வந்த நாள், மீண்டும் ஊழல் ஆட்சி வந்த நாள். நிர்வாக திறமையில்லாத ஆட்சி, 100 முறை அமைச்சர்களை மாற்றியமைத்த ஆட்சி, இந்தியாவிலே முதல்வர் ஊழல்க்கு சிறை சென்ற ஆட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால், ஒரு கையெழுத்தைப் போட்டு மதுவிலக்கை கொண்டு வந்திருப்போம்.

தமிழகத்தில் தற்போது நிர்வாக கடன் மூன்று லட்சம் கோடி. இதற்கு ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சி தான் காரணம். தி.மு.க., அ.தி.மு.க இரண்டையும் ஒதுக்குங்கள். அப்போதுதான் நீங்க, உங்க பசங்க எல்லாரும் நல்லாயிருப்பாங்க. ஒவ்வொரு தலைக்கும் 79 ஆயிரம் கடன் வாங்கப்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலின் அவர்கள் மம்மூட்டி வைத்து தூர்வாரினார் என பத்திரிக்கையில் படித்தேன். ஸ்டாலினுக்கு தெரியுமா? எத்தனை குளங்கள் ஆறுகள் இருக்குனு. தூர்வாருவது என்னவென்ரால் தெரியுமா.

நீர்நிலைகள் காணமல் போனதுக்கு காரணம் தி.மு.காவும் அதிமுகாவும் தான். திமுகாவும் அதிமுகாவும் காலாவதி ஆகிவிட்டது. மு.க ஸ்டாலின் என்னுடைய அருமை நண்பர், நான் எதை செய்தாலும் அதை காப்பி அடிப்பார். தமிழ்நாடு அவசர சிகிச்சை பிரிவில் இருக்கு, ரொம்ப மோசமாக இருக்கு’ என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close