தென் தமிழக கடலோரம், அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரனமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதே போல் டெல்டா மற்றும் உள் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் தலா 5 செ.மீட்டர் மழையும்,மதுரை திருமங்கலம் மற்றும் காஞ்சிபுரம் உத்ரமேரூரில் தலா 4 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.