அரசின் மெத்தனமே போராட்டத்துக்குக் காரணம் : ஜவாஹிருல்லா கண்டுபிடுப்பு

தனியார் பேரூந்துகள், ஆட்டோகள், கால் டாக்சிகளின் கட்டணங்கள் பன்படங்கு உயர்ந்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து நிர்வாகத்துடன் நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பகுதிகளில் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் பேரூந்துகள், ஆட்டோகள், கால் டாக்சிகளின் கட்டணங்கள் பன்படங்கு உயர்ந்துள்ளது. இந்த போராட்டத்தால் மக்கள் படும் துன்பங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுதான் காரணம், போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில் ஆரம்பம் முதலே மெத்தனப்போக்கை கடைப்பிடித்ததால்தான் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

நியாயமான நீண்ட கால கோரிக்கையை ஏற்று இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வுகான வேண்டும்எ.

இவ்வாறு ஜவாஹிருல்லால் அறிக்கையில் சொல்லியுள்ளார்.

×Close
×Close