மதுரை விமான நிலையத்தில் தொல் .திருமாவளவன் பேட்டி:
மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் 5 மடங்கு உயத்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இது அதிகம். மருத்துவ படிப்புக்கான மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவ படிப்பை வணிகமாக செயல்படுத்துகின்றனர். இதனை வன்மை யாக விடுதலைச் சிறுத்தைகள் கண்டிக்கிறது.
திருப்பூரில் ரூ. 570 கோடி கன்டெய்னர் பணம் கைப்பற்ற பட்டதில் முரண்பாடன தகவல்கள் வருகின்றன. அதற்கு பாதுகாவலர்களாக வந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இதில் அரசியல் அதிகார பலமுள்ளவர்கள் பின்னணியில் உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை தேவை.
பாரதிய ஜனதா கட்சி தனக்கு பிடிக்காதவர்கள் மீதும், எதிர்கட்சியினர் மீதும் சிபிஐ, அமலாக்க துறை, வருமான வரித்துறையை ஏவிவிட்டு, சோதனை என்ற பெயரில் பழி வாங்குகிறது. இதை முந்தைய காங்கிரஸ் கட்சியும் செய்தது. ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனை பழி வாங்கும் நடவடிக்கையில்லாமல் இருந்தால் சரி. இதனால் பொதுமக்களுக்கு சிபிஐ மீது உள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
அதிமுக பிளவு படுவது தமிழகத்திற்கு நல்லதல்ல. ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட முண்ணனி தலைவர்கள் கூடி பேசி முடிவு எடுக்க வேண்டும் .
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.