scorecardresearch

ஜார்கண்ட் ஆளுனராக சி.பி ராதாகிருஷ்ணன் நியமனம்: இல. கணேசன் நாகாலாந்து ஆளுனராக மாற்றம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் ஆளுனராக சி.பி ராதாகிருஷ்ணன் நியமனம்: இல. கணேசன் நாகாலாந்து ஆளுனராக மாற்றம்

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு, 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குடியசுத் தலைவர் மாளிகை வெளிட்ட தகவலின்படி “ ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜார்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.  மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து ஆளுநராக இடமாற்றம் செய்யபட்டுள்ளார்” என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு  பாஜகவின் தலைவராக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், 2 முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.  2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thirteen governor new appointments from india president

Best of Express