Advertisment

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2018 : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜாதி அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிவதற்கும் கோஷங்கள் எழுப்பி வருவதற்கும் தடை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil

Tamil Nadu news today in tamil

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2018 : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வருடா வருடம் கந்த சஷ்டி கவச விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி கவச விழா நாளை சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவடைகிறது.

Advertisment

இந்த நிகழ்வினைக் காண ஆயிர கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க : திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஐந்தாவது நாள்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2018 : பாதுகாப்பு ஏற்பாடுகள்

  • சூரசம்ஹார திருவிழாவிற்கு தூத்துக்குடி வழியாக வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு வீரபாண்டியன்பட்டிணம் அருகே ஜே.ஜே. நகர் அருகே தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • திருநெல்வேலி வழியாக வரும் வாகனங்கள் குமாரபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
  • வள்ளியூர் மற்றும் சாத்தான்குளம் வழியாக வரும் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் இருக்கும் எஃப்.சி.ஐ அருகே வாகனம் நிறுத்தமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
  • கன்னியாகுமரி மற்றும் உவரி வழியே வரும் வாகனங்களை நிறுத்த வேலவன் நகரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
  • திருச்செந்தூர் நகர் முழுவதும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் 70 சி.சி.டி.வி கேமிராக்கள், 10 எல்.இ.டி.டிவிக்கள் ஆகியவைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • கடற்கரை மணல் பகுதியில் ரோந்து செல்லக்கூடிய இரண்டு ரோந்து வாகனங்கள் (ஏ.டி.வி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலினுள் 6 பைபர் படகுகள் நிறுத்தப்பட்டு கடலில் குளிக்கும் பக்தர்களை கண்காணிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • கடலில் குளிப்பவர்கள் ஒளிரும் விளக்குகளுடன் (பிளிக்கரிங் லைட்) அமைக்கப்பட்டுள்ள மிதவைகள் போடப்பட்டுள்ள பகுதியை தாண்டிச் சென்று குளிக்க அனுமதி இல்லை. மரத் தடுப்புகளை யாரேனும் ஏறித் தாண்டினாலோ, சேதப்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான ஒளி, ஒலி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மே ஐ ஹெல்ப் யூ பூத்கள் 6 இடங்களில் வைக்கப்பட்டு போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர் காவல் படை பிரிவினர் உட்பட சுமார் 3200 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
  • தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக 24 மணி நேரமும் இயங்கும் காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திருச்செந்தூர் கோவில் புறக் காவல் நிலையத்திலும், கடற்கரையிலும் அமைக்கப்பட்டு பொதுமக்களின் புகார் மற்றும் கோரிக்கைகள் கேட்டறிந்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
Thiruchendur Murugan Kovil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment