Advertisment

பொதுமக்கள் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி பயன்பெற மாநகராட்சி ஆணையர் அழைப்பு

பொதுமக்கள் மாநகராட்சியினை அணுகி உடனடியாக தேவைப்படும் வசதிகளை பெற்று பயன்பெற மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tiruchi news, latest trichy news, tiruchirappalli corporation news, tamil nadu, latest tamil nadu news

திருச்சி மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் மு. அன்பழகனிடம் ராணிமெய்யம்மை நகர் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகு பந்து விளையாட்டு அரங்கம் கட்டும் பணியினை மேற்கொள்ள ரூ.25.00 இலட்சம் காசோலை வழங்கினர்.

Advertisment

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் இன்று 06.03. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.

திருச்சி மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள திருச்சி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம் 4, வார்டு எண் 65-க்குட்பட்ட ராணிமெய்யம்மை நகர் பகுதியில் இறகு பந்து விளையாட்டு அரங்கம் கட்டும் பணியினை மேற்கொள்ள மதிப்பீட்டு தொகை ரூ.75.00 லட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.25.00 இலட்சம் வழங்குவதற்கு சம்மதித்து அதற்கான காசோலை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், ஆகியோரிடம் காசோலையை பொதுமக்கள் சார்பாக மக்கள் குறைதீற்கும் நாள் கூட்டத்தில் வழங்கினர்.

திருச்சி மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் பொது மக்களின் பங்களிப்புடன் நீர்நிலை புனரமைப்பு (தூர்வாருதல் மற்றும் கரையினை பலப்படுத்துதல் – பங்களிப்பு தொகை 50%), விளையாட்டு திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மற்றும் மேம்படுத்துதல், எல்.இ.டி. மின்விளக்கு அமைத்தல், ‘சி.சி.டி.வி.’ கேமரா பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மரக்கன்று நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டிடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் புனரமைத்தல், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும், தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சியினை அனுகி உடனடியாக தேவைப்படும் வசதிகளை பெற்று பயன்பெற மாநகராட்சி ஆணையரால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, பு.ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment