scorecardresearch

உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் 4 பேர் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தினர்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேச்சு

உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்றும், 34 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்  மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி திராவிடர் கழம் சார்பில்  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் பேசியதாவது” உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதிகள் இல்லை. தொடர்ந்து அநீதி நடக்கிறது.  உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34, அதில் 30 பேர் உயர் சாதியினர், 4 பேர் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இடஒதுக்கீடு முழுமையாக நிரப்புவது இல்லை” என்று அவர் கூறினார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thiruma speech on supreme court judge recuirtment

Best of Express