முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை காப்பதற்காகவே டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன் எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும் போது : நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால், அதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது, தகுதி நீக்க நடவடிக்கை மூலம் தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை பாதுகாப்பதற்காகவே, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் வரை தற்போதைய ஆட்சியை பாஜக பாதுகாக்கும். தமிழக அரசியல் சூழநிலைக்கு தற்போது நிரந்தரமான ஆளுநரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினார்.