கருணாநிதி வைரவிழா: தமிழக தலைவர்களின் உரை இல்லாதது ஏமாற்றம் : திருமாவளவன்

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜை திருமாவளவன் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சகிப்பின்மையின் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழாவில், தேசிய தலைவர்கள் அனைவரும் மதச்சார்பின்மை குறித்து பேசியது பாராட்டத்தக்கது. எனினும், தமிழக தலைவர்களை பேச வைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

கருணாநிதியை எதிர்த்தோ, அல்லது ஆதரித்தோ இருந்த தமிழக தலைவர்களை மேடையில் பேச வைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், கருணாநிதி குறித்து நிறைய விஷயங்களை அறிந்திருக்க முடியும் என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close