/indian-express-tamil/media/media_files/2025/10/14/pradeep-john-2025-10-14-11-05-19.jpg)
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று (அக்டோபர் 14) சென்னையில் திடீர், தீவிரமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை (அக்டோபர் 15) முதல் அடுத்த 4 நாட்களுக்கு (அக்டோபர் 15 முதல் 18 வரை) மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மழை தீவிரமடையும் பகுதிகள்:
பிரதீப் ஜானின் எக்ஸ்தள பதிவின்படி, இன்று முதல் மழை தீவிரம் அடையப்போகும் கடலோர மாவட்டங்களின் பட்டியலில் தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று முதல் திடீர், வேகமான மழை பெய்யத் தொடங்கும். கடல் பகுதியில் இருந்து மேகங்கள் சென்னை நோக்கி நகர்வது ஒரு அழகான காட்சியாக உள்ளது என்றும், இந்த சிறிய மேகக் கூட்டங்களே குறுகிய நேரத்தில் 20 முதல் 30 மி.மீ வரை மழையைப் பொழியக்கூடிய திறன் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள உள் மாவட்டங்கள்:
கடலோரப் பகுதிகள் தவிர, தமிழகத்தின் உள் மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
Sudden sharp showers will increase in KTCC (Chennai) and other coastal areas from today. Rains will pick up and increase in intensity from 15-18th October
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2025
===========
The clouds from sea moving into Sea into KTCC is a beautiful sight. Enjoy the short intense burst today. The… pic.twitter.com/dWNTK8guWg
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
மழை தீவிரமடையும் சூழலைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள், இன்று முதல் அலுவலகம் செல்பவர்கள் கட்டாயம் குடை அல்லது ரெயின்கோட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார். அக்டோபர் 15ஆம் தேதி முதல் மழை தீவிரமடைந்து, 18ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிரதீப் ஜானின் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின்படி, இன்று (அக்டோபர் 14) சென்னையில் திடீர், தீவிரமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை (அக்டோபர் 15) முதல் அடுத்த 4 நாட்களுக்கு (அக்டோபர் 15 முதல் 18 வரை) மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.