ஸ்டாலினுக்கு மிரட்டல் வீடியோ; இளைஞரை கைது செய்ய இடைக்காலத் தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு

நெல்லை மாவட்டம் அளவந்தான்குளத்தைச் சேர்ந்த செல்வின் அந்தோணி என்பவர், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'டேக்' செய்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

நெல்லை மாவட்டம் அளவந்தான்குளத்தைச் சேர்ந்த செல்வின் அந்தோணி என்பவர், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'டேக்' செய்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
Madurai Bench of Madras High Court condemns TN Govt Tamil News

நெல்லை மாவட்டம் அளவந்தான்குளத்தைச் சேர்ந்த செல்வின் அந்தோணி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு குறித்து மதுரை ஐகோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
“நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த சிலர், தமிழக முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

Advertisment

அந்த வீடியோவை நான் எடிட் செய்யவோ அல்லது பதிவேற்றவோ செய்யவில்லை. எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை டேக் செய்தேன் என்பது மட்டுமே உண்மை. எனவே, இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு முன்ஜாமீன் வழங்கவும்.” மனு விசாரணை நீதிபதி ஸ்ரீமதி முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, “வீடியோ பதிவேற்றத்துக்கும், மனுதாரருக்கும் எந்த உறவுமில்லை; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்” என்று தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், நீதிபதி மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என இடைக்காலத் தடை உத்தரவையும் பிறப்பித்தார்.

Mk Stalin Madurai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: