Advertisment

கூடங்குளம் வழக்கு; சுப. உதயகுமாரன் உட்பட மூவர் விடுதலை

கூடங்குளம் போராட்ட வழக்கில் சுப உதயகுமாரன் உட்பட மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Kudankulam nuclear plant

கூடங்குளம் அணுமின் நிலையம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது இரண்டு மீனவர்கள் வெட்டப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணை முடிவில், இருவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் வெட்டப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், போராட்டக் குழு தலைவர் சுப உதயகுமாரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் சுப உதயகுமாரன், புஷ்பராஜன், சேஸ் ராஜ் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 18 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kudankylam Powerplant Suba Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment